முன்னாள் எம்.எல்.ஏ.வும், திமுக செய்தித் தொடர்பாளருமான கோவை செல்வராஜ் இன்று (நவம்பர் 8) காலமானார். அவருக்கு வயது 66
திருப்பதியில் அவரது 3ஆவது மகனின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு வீடு திரும்பும்போது திடீர் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே உயிரிழந்துவிட்டார்.
நாளை காலை அவரது உடல் கோவை கொண்டு வரப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
கோவை செல்வராஜ் முதலில் அதிமுகவில் இருந்தவர். அதிமுகவில் பிளவு ஏற்பட்ட சமயத்தில் ஓபிஎஸ் அணிக்கு ஆதரவாக செயல்பட்டார். ஓபிஎஸ் அணியில் மாவட்ட செயலாளராக இருந்த கோவை செல்வராஜ் 2022 டிசம்பர் மாதம் அங்கிருந்து விலகி திமுகவில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் இணைந்தார்.
அப்போது திராவிட பாரம்பரியத்தில் நீடிக்கவே திமுகவில் இணைந்தேன் என்று தெரிவித்திருந்தார் கோவை செல்வராஜ்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக திமுகவில் செயல்பட்டு வந்த இவர் இன்று காலமானார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
ஆம்ஸ்டெர்டாமில் ரசிகர்கள் மீது தாக்குதல்… விமானத்தை கிளப்பிய இஸ்ரேல்
நாளை முதல் நான் தீர்ப்பளிக்கமுடியாது : ஓய்வு பெற்ற நாளில் தலைமை நீதிபதி சந்திரசூட் உருக்கம்!