திமுக மாவட்ட செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள் கலந்தாலோசனை கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அக்டோபர் 1-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று (செப்டம்பர் 29) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள், தலைமை கழகத்தால் நியமிக்கப்பட்ட தொகுதி பார்வையாளர்கள் கலந்தாலோசனை கூட்டம் அக்டோபர் 1-ஆம் தேதி காலை 10.30 மணியளவில் காணொலி காட்சி வாயிலாக நடைபெறும். இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள், அமைச்சர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
என்டிஏ கூட்டணியிலிருந்து விலகுவதாக அதிமுக அறிவித்ததையடுத்து நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்தசூழலில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் விவகாரம், கலைஞர் நூற்றாண்டு விழா உள்ளிட்ட விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செல்வம்
மாற்றுத்திறனாளி வயிற்றில் கண்ணாடி பாட்டில்: வெற்றிகரமாக அகற்றிய மருத்துவர்கள்
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!