மெழுகுவர்த்தியை போல் திமுக ஆட்சி: அண்ணாமலை அட்டாக்!

Published On:

| By Jegadeesh

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குடிதண்ணீர் தொட்டி அருகே துணி துவைத்த ராணுவ வீரருக்கும் திமுக கவுன்சிலருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதையடுத்து, ராணுவ வீரர் பிரபு கொல்லப்பட்டார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், ராணுவ வீரர் பிரபு மரணத்திற்கு நீதி கேட்டு பாஜக சார்பில் சென்னை சேப்பாக்கத்தில் உண்ணாவிரதப் போராட்டம் இன்று (பிப்ரவரி 21 ) நடைபெற்றது.

அதில், பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் இந்தியாவில் ஒரு ஈகோசிஸ்டம் உள்ளது. ஜே.என்.யூ ஈகோ சிஸ்டம், ஜந்தர் மந்தர் ஈகோ சிஸ்டம். எங்கேயாவது அரியானாவில் ஒரு நாய் செத்துப் போயிருக்கும். பிஜேபி ஆட்சியில் இருக்கும். உடனே கனிமொழி மெழுகுவர்த்தியுடன் வருவார்கள்.

உத்தர பிரதேசத்தில் ஒரு குரங்கிற்கு வயிறு சரி இல்லாமல் போயிருக்கும். அந்த குரங்கிற்கு வயிறு சரியில்லாமல் போனதற்கு யோகி ஆதித்யநாத் தான் காரணம் என்று மெழுகுவர்த்தியை தூக்கிக் கொண்டு குறுக்கவும் மறுக்கவும் ஓடுவார்கள் என்று கூறினார்.

மேலும், இன்றைக்கு அந்த கும்பல் எங்கே சென்றது. மெழுகுவர்த்தியை யார் கையில் எடுத்தாலும் அது மொத்தமாக எரிந்து கீழே வந்துவிடும். அதேபோலத்தான் உங்க (திமுக) ஆட்சி. மெழுகுவர்த்தி போல உங்க ஆட்சி எரிந்து கொண்டு இருக்கிறது. அது உங்களை உணர்த்துவதற்காகத்தான். மெழுகுவர்த்தி எப்படி எரிந்து உருக்குலைந்துபோகிறதோ அதேபோல்தான் உங்கள் ஆட்சியும். உங்கள் ஆணவம் இப்போது தலைவிரித்து ஆடினாலும் கூட அதற்கும் நேரமும் காலமும் இருக்கத்தான் செய்கிறது.

2024-ல் முழுமையாக எரிகிறதா? 2026-ல் முழுமையாக எரிகிறதா என்பதை காலமும் அரசும் ஜனாதிபதியும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். தினமும் இப்படி இரண்டு மாதத்திற்கு ஒரு பிரச்சினை சென்று கொண்டிருந்தால் எப்படி அரசை நடத்துவீர்கள். இந்திய அளவில் பேசப்படுகிற ஒரு பிரச்சினை இரண்டு மாதத்திற்கு ஒருமுறை தமிழகத்தில் இருந்து தான் உருவாகிறது என்று கூறினார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

எல்லா இடங்களிலும் உன்னைத் தேடுகிறேன் அம்மா… ஸ்ரீதேவி மகள் உருக்கம்!

மோதிக்கொண்ட பெண் அதிகாரிகள்: நடவடிக்கை எடுத்த கர்நாடக அரசு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel