மறைந்த திமுக விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினரும், விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளருமான புகழேந்தியின் உடல் இன்று (ஏப்ரல் 7) 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
கடந்த ஏப்ரல் 5-ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்ட விழுப்புரம் பிரச்சார பொதுக்கூட்டத்தில் இருந்தபோது புகழேந்தி மயக்கமடைந்தார். உடனடியாக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், சிகிச்சை பலனின்றி நேற்று (ஏப்ரல் 6) காலமானார்.
இதனையடுத்து விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் வைக்கப்பட்ட புகழேந்தியின் உடலுக்கு, முதல்வர் ஸ்டாலின் மற்றும் திமுக நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். பின்னர், நேற்று இரவு புகழேந்தியின் உடல் அவரது சொந்த ஊரான அத்தியூர் திருவாதியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
இன்று காலை அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.சண்முகம் புகழேந்தியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் அமைச்சர் பொன்முடி தலைமையில் இறுதி ஊர்வலம் சென்று தென்பெண்ணை ஆற்றின் கரையோரம், அரசு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க புகழேந்தியின் உடல் தகனம் செய்யப்பட்டது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ரெய்டில் சிக்கிய நயினார்: 4 கோடி பறிமுதல் வழக்கை விசாரிக்கும் ஐடி!
Thalapathy 69: மொத்தம் 4 ஹீரோயின்கள்… விஜயுடன் ஜோடி போடப்போவது யார்?