“தமிழ்நாட்டின் பெயரைக் கூட சொல்லல” : மோடி அரசுக்கு எதிராக ஸ்டாலின் எடுத்த முடிவு!

Published On:

| By Kavi

நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டுக்கு அநீதி இழைத்த மோடி அரசுக்கு எதிராக கண்டன பொதுக்கூட்டம் நடத்தப்படும் என்று திமுக தலைமை அறிவித்துள்ளது. dmk protest against modi government

கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி 2025ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில் பீகாருக்கு ஏராளமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்தன.

ஆனால் தென்மாநிலங்களுக்கு குறிப்பாக தமிழ்நாட்டுக்கென தனியாக எந்த அறிவிப்பும் இல்லை. தமிழகம் வைத்த கோரிக்கைகளும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை.

இந்த நிலையில், ‘இது மத்திய பட்ஜெட்டா… இல்லை பீகார் பட்ஜெட்டா’… பீகாருக்கு நிதி தமிழகத்துக்கு திருக்குறள் மட்டுமா’ என பாஜக மற்றும் அதன் கூட்டணியை தவிர தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் கேள்வி எழுப்பின.

அநீதி இழைத்த மோடி dmk protest against modi government

dmk protest against modi government

இந்தநிலையில் பிரதமர் மோடி அரசுக்கு கண்டனம் தெரிவித்து பொதுக்கூட்டம் நடத்த திமுக திட்டமிட்டுள்ளது.

திமுக தலைமை இன்று (பிப்ரவரி 3) வெளியிட்ட அறிவிப்பில், “ஓரவஞ்சனையான நிதிப் பகிர்வு, தமிழ்நாட்டின் முக்கியத் திட்டங்கள் புறக்கணிப்பு, தமிழ்நாடு முதலமைச்சரின் தொடர்ச்சியான கோரிக்கைகளுக்குப் பிறகும், எஸ்.எஸ்.ஏ. பேரிடர் மேலாண்மை ஆகியவற்றுக்கு நிதி ஒதுக்காதது,

ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற பெயரைக் கூட உச்சரிக்காதது என நிதிநிலை அறிக்கையிலும் தமிழ்நாட்டுக்கு அநீதி இழைத்த மோடி அரசைக் கண்டித்து வருகிற பிப்ரவரி 8, மாலை தமிழ்நாடு முழுவதும் அமைப்பு ரீதியான அனைத்து மாவட்டங்களின் சார்பில் “கண்டன பொதுக்கூட்டம்” நடைபெறும்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது. dmk protest against modi government

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel