கெஜ்ரிவால் கைது: சென்னையில் திமுக ஆர்ப்பாட்டம்!

அரசியல்

டெல்லி புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்கத்துறையால் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று (மார்ச் 21) இரவு கைது செய்யப்பட்டார்.

கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை கண்டித்து இந்தியா முழுவதும் ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள், இந்தியா கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில், சென்னை தெற்கு ரயில்வே தலைமை அலுவலகம் முன்பு திமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது, “விடுதலை செய்…விடுதலை செய்..கெஜ்ரிவாலை விடுதலை செய்…பழிவாங்காதே… பழிவாங்கதே…எதிர்க்கட்சிகளை பழிவாங்காதே” என்று மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

பின்னர் ஆர்ப்பாட்டத்தில் பேசிய தயாநிதி மாறன், “அமலாக்கத்துறையை வைத்து மிரட்டி தேர்தல் பத்திரங்கள் மூலமாக ரூ.8,000 கோடியை பாஜக அரசு வசூல் செய்திருக்கிறார்கள். இது வன்மையாக கண்டிக்கத்தக்து. ஜனநாயாக நாட்டில் மிகப்பெரிய மாற்றத்தை இந்திய மக்கள் கொண்டுவர போகிறார்கள்.

இந்தியா கூட்டணியின் மீது இருக்கும் பயத்தினால் மோடி, அமித்ஷா, நிர்மலா சீதாராமன் ஆகியோர் எதிர்க்கட்சி தலைவர்களை கைது செய்கிறார்கள்.

அரவிந்த் கெஜ்ரிவாலை தேர்தல் சமயத்தில் ஏன் கைது செய்ய வேண்டும்? நாளைக்கே விசாரணை நடத்த போகிறார்களா? இதேபோல தான் செந்தில் பாலாஜியையும் கைது செய்தார்கள். நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை விசாரணை இன்னும் நடைபெறவில்லை.

டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவை ஓராண்டுக்கும் மேலாக சிறையில் வைத்துள்ளார்கள். அந்த வழக்கும் நீதிமன்றத்திற்கு வரவில்லை. இந்தியாவை சர்வாதிகார நாடாக மோடி மாற்றிக்கொண்டிருக்கிறார். இதனை எதிர்த்து திமுக சார்பில் போராட்டம் நடத்துகிறோம்” என்று தெரிவித்தார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ராதிகா விருதுநகரில் போட்டி : பாஜக வேட்பாளர்கள் பட்டியல்!

தேர்தல் பத்திரங்கள்: பாஜகவிற்கு அதிக நிதி கொடுத்த நிறுவனங்கள் இவைதான்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0