இந்தியாவைக் காப்பாற்ற தயாராக வேண்டும் : மு.க.ஸ்டாலின்

அரசியல்

இந்தியாவைக் காப்பாற்ற நாடாளுமன்றத் தேர்தலுக்கு இப்போதே தயாராக வேண்டும் என்று திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் கூறினார்.

திமுக மாநில விவசாய அணி துணைச் செயலாளர் நல்ல சேதுபதி இல்ல திருமண விழா சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (ஏப்ரல் 23) நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு முதல்வர் ஸ்டாலின் திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்திப் பேசினார்.

“நான் இப்போது அதிகம் பேசுவதில்லை. செயலில் காட்ட வேண்டும் என்ற கொள்கையோடு இருக்கிறேன். கலைஞர் நூற்றாண்டு விழா ஜூன் 3ஆம் தேதி தொடங்குகிறது. இதனை முன்னிட்டு மாவட்ட செயலாளர்களைக் கூட்டி, புதிய உறுப்பினர்களைச் சேர்க்க இலக்கு நிர்ணயித்திருக்கிறோம்.

அதையும் தாண்டி 2024 நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி பூத் கமிட்டிகளை அமைக்கவும் இலக்கு நிர்ணயித்திருக்கிறோம். இந்த இலக்கை நிறைவேற்றினால் தான் இந்த நாட்டை காப்பாற்ற முடியும், இதை நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழ்நாடு வளர்ந்துகொண்டிருக்கிறது. ஆட்சிக்கு வந்து மூன்றாம் ஆண்டை தொடங்க இருக்கிறோம்.

நிதிநிலை பற்றாக்குறை இருந்தாலும், ஒன்றிய அரசு நமக்கு துணை நிற்காவிட்டாலும், நம்பர் ஒன் முதலமைச்சர் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறோம்” என நிறைவேற்றப்பட்ட திமுகவின் வாக்குறுதிகளைப் பட்டியலிட்டார்.

பெண்களுக்கான உரிமைத் தொகை பற்றி பேசிய அவர், சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவித்தபடி அண்ணா பிறந்தநாள் அன்று இத்திட்டம் தொடங்கப்படும் என்றார்.

மாநில உரிமைகளை விட்டுக்கொடுக்கக் கூடாது எனப் போராடிக்கொண்டிருக்கிறோம் என்று தெரிவித்த மு.க.ஸ்டாலின், “2024 தேர்தலில் அகில இந்திய அளவில் நாம் வெற்றி பெற்றால் தான் இந்த நாட்டை காப்பாற்ற முடியும் என்ற சூழல் உருவாகியுள்ளது.

அதை அனைவரும் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். இந்தியாவை காப்பாற்றுவதற்கு நீங்கள் எல்லாம் இப்போதே தயாராக இருக்க வேண்டும். அதற்கு நீங்கள் உங்களை ஊக்கப்படுத்திக்கொள்ள வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

பிரியா

கங்கனாவின் எமர்ஜென்சி: ஜி.வி.பிரகாஷ் கொடுத்த அப்டேட்!

அதிமுகவில் இணைந்த அமமுக பொருளாளர் ஆர்.மனோகரன்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *