ஜூன் 1-ஆம் தேதியுடன் நாடாளுமன்ற இறுதிக்கட்ட தேர்தல் முடிவடைய உள்ளது. இந்தநிலையில், பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக மே 30-ஆம் தேதி தமிழகம் வருகிறார். தொடர்ந்து மே 31-ஆம் தேதி விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் மேற்கொள்ள உள்ளார்.
இதற்கு தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மேலும், தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் பிரதமரின் தியான நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கக்கூடாது என்று தேர்தல் ஆணையத்தில் இன்று (மே 29) மனு அளிக்கப்பட்டது.
இதே கோரிக்கையை வலியுறுத்தி கன்னியாகுமரி மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி சார்பில் மாவட்ட தேர்தல் அலுவலர் ஸ்ரீதரிடம் இன்று மனு அளிக்கப்பட்டது.
அந்த மனுவில், “தேர்தல் நன்னடத்தை விதிமுறை தற்போது அமலில் உள்ள நிலையில், பிரதமர் மோடியின் வருகை அதனை மீறுவதாக அமைந்துள்ளது. தன்னை விளம்பரப்படுத்தும் நோக்கில் மோடி தியானம் மேற்கொள்கிறார்.
மோடியின் மூன்று நாள் வருகையால் பிற மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து கன்னியாகுமரி வரும் சுற்றுலா பயணிகளுக்கு இடையூறு ஏற்படும்.
மேலும், பாதுகாப்பு என்ற பெயரில் விவேகானந்தர் மண்டபம் மற்றும் அதனை ஒட்டி அமைந்துள்ள கடைகளை மூடியிருப்பதால் வணிகர்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். எனவே, பிரதமரின் தியான நிகழ்ச்சியை ரத்து செய்ய வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அமெரிக்காவில் தெருக்கூத்து: கின்னஸ் சாதனை படைத்த சங்ககிரி ராச்குமார்
மோடி தியானத்துக்கு தடை… தேர்தல் ஆணையத்திடம் செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்!