மக்களவை: திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு!

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் குறித்துப் பேசுவதற்கு மக்களவையில் அனுமதி மறுக்கப்பட்டதால் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. பின்னர் இந்த மசோதா தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த மசோதா குறித்த ஆளுநரின் கேள்விகளுக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விளக்கமும் அளித்திருந்தார். ஆனால் ஆளுநர் ஆன்லைன் சூதாட்ட மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காமல் காலதாமதம் செய்து வந்தார்.

இதனால் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா காலாவதியாகிவிட்டது. இதற்குப் பல அரசியல் கட்சியினரும் ஆளுநருக்கு எதிராகக் கருத்துக்களைப் பதிவு செய்து வந்தனர்.
இந்நிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று (டிசம்பர் 7) தொடங்கி இன்று (டிசம்பர் 8) இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது.

இன்று மக்களவையில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு விரைந்து ஒப்புதல் வழங்க திமுக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும் இது குறித்துப் பேசுவதற்கு அமைச்சர் டி.ஆர். பாலுவிற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதனால் மக்களவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.

மோனிஷா

தென்காசிக்கு முதல்வர் வெளியிட்ட புதிய அறிவிப்புகள்!

இமாச்சல்: எம்.எல்.ஏ.க்களை காப்பாற்ற காங்கிரஸின் மெகா திட்டம்!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts