Leaders celebrate stalin birthday
திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 1) தனது 71ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
இதையொட்டி இன்று காலை தனது வீட்டில் உள்ள கலைஞரின் புகைப்படத்துக்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். தனது குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடினார்.
காலை 8 மணிக்கு மெரினாவுக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின் அங்குள்ள அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
அங்கிருந்து பெரியார் நினைவிடத்துக்கு சென்ற அவர், மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி ஆகியோருடன் கேக் வெட்டி கொண்டாடினார்.
கோபாலபுரம் இல்லத்துக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின் அங்குள்ள கலைஞர் புகைப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தாயார் தயாளு அம்மாளிடம் வாழ்த்து பெற்றார்.
சி.ஐ.டி காலனி இல்லத்துக்கு சென்று கலைஞர் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி, ராஜாத்தி அம்மாளிடம் வாழ்த்து பெற்றார்.
9 மணியளவில் அண்ணா அறிவாலயத்துக்கு சென்றார் முதல்வர் ஸ்டாலின், அவரது வருகைக்காக தொண்டர்கள், விவசாயிகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் காத்திருந்தனர்.
அண்ணா அறிவாலயத்துக்கு வந்ததும் அங்கு சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார். தொடர்ந்து அவரை அரசியல் கட்சித் தலைவர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை,
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, Leaders celebrate stalin birthday
தமிழ்நாடு வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்.
மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா,
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொய்தீன்,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்,
கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் ஈஸ்வரன்,
விசிக தலைவர் திருமாவளவன், உள்ளிட்டோர் சால்வை அணிவித்து புத்தகங்கள் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.
புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமியும் முதல்வர் ஸ்டாலினுக்கு நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தார்.
தொண்டர்களும் நீண்ட வரிசையில் வந்து, புத்தகம், சால்வை, மலர்கொத்து, முதல்வரின் புகைப்படம் என பரிசுகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். மு.க.ஸ்டாலின் நாற்காலியில் அமர்ந்தபடி தொண்டர்களிடம் வாழ்த்துகளை பெற்றார்.
இடையிடையே தொலைபேசி அழைப்புகள் வாயிலாகவும் முதல்வருக்கு வாழ்த்துகள் வந்துகொண்டே இருந்தது.
தனது தந்தையும், முதல்வருமான ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திருவல்லிக்கேணி சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் இயங்கி வரும் அரசு கஸ்தூரிபாய் காந்தி தாய், சேய் நல மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தலா ஒரு தங்க மோதிரம் பரிசளித்தார்.
மொத்தம் 12 குழந்தைகளுக்கு தங்கம் மோதிரம் அணிவித்தார்.
தமிழ்நாடு முழுவதும் திமுக தொண்டர்கள் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
ஹாலிவுட்டில் ‘ரீமேக்’ ஆகும் முதல் இந்திய படம்!
தருமபுரம் ஆதீனத்துக்கு மிரட்டல்: பாஜக மாவட்ட தலைவரை பிடிக்க தனிப்படை!