திமுக சாதனை விளக்க பொதுக்கூட்டம்: காஞ்சிபுரத்தில் ஸ்டாலின் உரையாற்றுகிறார்!

அரசியல்

மே 7-ஆம் தேதி காஞ்சிபுரம் கன்டோன்மென்ட் பகுதியில் நடைபெறும் திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றுகிறார்.

திமுக அரசு பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவு பெற உள்ளது. இந்தநிலையில் அரசால் நிறைவேற்றப்பட்ட திட்டங்களின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்த்திடும் வகையில் தமிழ்நாடு முழுவதும் 1222 இடங்களில் 72 கழக மாவட்டங்களுக்குட்பட்ட ஒன்றிய, நகர, பகுதி ஆகிய அமைப்புகளின் சார்பில் மே 7,8,9 ஆகிய நாட்களில் இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

மே 7-ஆம் தேதி திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் காஞ்சிபுரம் கன்டோன்மென்ட் பகுதியிலும், நாகர்கோவிலில் அமைச்சர் துரைமுருகன், சேலம் தாரமங்கலத்தில் அமைச்சர் கே.என்.நேரு,

தேனி பெரியகுளத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி, கடலூர் பண்ருட்டியில் அமைச்சர் பொன்முடி, நீலகிரி கோத்தகிரியில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, தூத்துக்குடியில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி,

சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மதுரை சிம்மக்கல் பகுதியில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், விருதுநகர் சிவகாசியில் அமைச்சர் தங்கம் தென்னரசு, தூத்துக்குடி திரேஸ்புரத்தில் அமைச்சர் கீதா ஜீவன் உள்ளிட்டோர் உரையாற்றுகின்றனர்.

கடந்த ஒரு வாரமாக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக வெளியான ஆடியோக்கள் திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. நேற்று முதல்வர் ஸ்டாலின் பிடிஆர் ஆடியோ குறித்து பேசியபோது மட்டமான அரசியலில் ஈடுபடுபவர்களுக்கு நான் விளம்பரம் தேடித்தர விரும்பவில்லை என்று தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மதுரை சிம்மக்கல் பகுதியில் நடைபெறும் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார் என்று திமுக சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மே 8 மற்றும் 9-ஆம் தேதிகளுக்கான பட்டியல் தொடர்ந்து அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செல்வம்

பக்தர்கள் வெள்ளத்தில் மீனாட்சி அம்மன் தேரோட்டம்!

ஐபிஎல் டிக்கெட் விற்பனை: நள்ளிரவில் போலீஸ் நடத்திய பேட்டிங்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *