திமுக சார்பில் நீட் தேர்வுக்கு எதிராக சென்னையில் நாளை (ஆகஸ்ட் 20) நடைபெற உள்ள உண்ணாவிரத போராட்டத்தை அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் துவக்கி வைக்கிறார்.
நீட் தேர்வை ரத்து செய்ய மறுக்கும் மத்திய அரசு மற்றும் ஆளுநரை கண்டித்து திமுகவின் இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவ அணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது. இந்த உண்ணாவிரத போராட்டத்தில் மாவட்ட வாரியாக பங்குபெறுவோர் குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது.
அதன்படி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் போராட்டத்தை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் துவக்கி வைக்கிறார். இந்த போராட்டத்தில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மாணவர் அணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன், மருத்துவ அணி செயலாளர் எழிலன், மருத்துவ அணி தலைவர் கனிமொழி சோமு மற்றும் சென்னை மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர்.
திருச்சியில் திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு, திண்டுக்கல்லில் துணை பொதுச்செயலாளர் ஐ. பெரியசாமி, திருவண்ணாமலையில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, பெரம்பலூரில் துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா, தூத்துக்குடியில் துணை பொதுச்செயலாளர் கனிமொழி ஆகியோர் உண்ணாவிரத்ததை முடித்து வைக்கின்றனர்.
இந்தநிலையில் மதுரையில் நாளை நடைபெறவிருந்த திமுக உண்ணாவிரத போராட்டம் ஆகஸ்ட் 23-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
செல்வம்
மரத்தடியில் பிரியாணி : ஜெயக்குமாரின் மதுரை பயணம்!
“தமிழகத்தில் சிறு, குறு தொழில் வளர்ச்சி முக்கியமானது” – ஸ்டாலின்