திமுக எம்பிக்கள் உட்பட 19 எம்பிக்கள் சஸ்பெண்ட்!

Published On:

| By Aara

மாநிலங்களவையில் திமுக எம்பிக்கள் உட்பட எதிர்க்கட்சி எம்பிக்கள் 11 பேர் இன்று (ஜூலை 26) சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

என்.ஆர். இளங்கோ, கிரிராஜன்,  சண்முகம், எம்.எம்.அப்துல்லா, கனிமொழி சோமு உள்ளிட்ட எம்பிக்கள் நாடாளுமன்றத்தில்  பண வீக்கம், ஜிஎஸ்டி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்னிறுத்தி விவாதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதற்காக  போராடினார்கள்.

இவர்கள் மாநிலங்களவையின் தலைவர் இருக்கையை நோக்கி முழக்கங்கள் எழுப்பிக் கொண்டு முன்னேறியதால் திமுக எம்பிக்கள் உள்ளிட்ட 11 எம்பிக்கள், இந்த வாரம் முழுதும் அவையில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது.  திரிணமூல் காங்கிரஸ்  சுஷ்மிதா தேவ், டாக்டர் சாந்தனு சென், டோலா சென் ஆகியோரும் சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு உள்ளான எம்பிக்கள் ஆவார்கள். தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி எம்பிக்களும் சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு உள்ளாகியிருக்கிறார்கள். இவர்களையும் சேர்த்து மொத்தம் 19 எம்.பிக்கள் இந்த வாரம் முழுதும் அவை நடவடிக்கைகளில் பங்குகொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.

வேந்தன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel