நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரை முன்னிட்டு வரும் செப்டம்பர் 16ஆம் தேதி திமுக எம்.பிக்கள் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற சிறப்புக்கூட்டத் தொடர் வரும் 18 முதல் 22ஆம் தேதி வரை நடைபெறும் என்று மக்களவை செயலகம் அறிவித்துள்ளது. ஐந்து நாட்கள் நடைபெறும் அக்கூட்டத்தில் கேள்வி நேரம், பூஜ்ஜிய நேரம் மற்றும் தனிநபர் மீதான விவாதம் போன்றவை இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, ’ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மற்றும் ’ஓபிசி இடஒதுக்கீடு’ தொடர்பான மசோதாக்கள் கொண்டுவரப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், இந்த சிறப்பு கூட்டத்தொடரை எவ்வாறு எதிர்கொள்ளலாம் என்பது குறித்து விவாதிக்க திமுக எம்.பி.க்கள் கூட்டம் வரும் செப்டம்பர் 16ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறவுள்ளது.
இதற்கான அறிவிப்பை அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று (செப்டம்பர் 4) வெளியிட்டுள்ளார்.
அந்த அறிவிப்பில், ”நடைபெற உள்ள நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கழக மக்களவை – மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம், 16-09-2023 சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு, சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள முரசொலி மாறன் வளாக கூட்ட அரங்கில் நடைபெறும்.
அதில், கழக மக்களவை – மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
அமைச்சர் செஞ்சி மஸ்தான் மகன், மருமகன் அதிரடி பதவி நீக்கம்!
இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகும் IndiaStandWithUdaystalin ஹேஸ்டேக்!