அகில இந்திய வானொலியில் இந்தி திணிப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து மத்திய அமைச்சருக்கு டி.ஆர்.பாலு இன்று (மே 7) கடிதம் எழுதி உள்ளார்.
அகில இந்திய வானொலியின் அறிவிப்புகள், செய்திகள் மற்றும் அலுவல் சார்ந்த கடிதங்களில், இனி ‘ஆல் இந்தியா ரேடியோ’ என்று பயன்படுத்தக்கூடாது என்றும், அதற்கு மாற்றாக ‘ஆகாஷ்வானி’ என்று தான் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் வானொலி நிலையங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூருக்கு, முதல்வர் ஸ்டாலின் பேரில் திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு இன்று கடிதம் எழுதியுள்ளார்.
அதில், ”ஆல் இந்தியா ரேடியோ என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, அதற்குப் பதிலாக ஆகாஷ்வானி என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது நியாயமற்றது. இது சரியானது அல்ல, ஏற்றுக்கொள்ள முடியாதது.
அகில இந்திய வானொலியில் தமிழுக்கு உரிய இடத்தை மறுத்து, அதற்குப் பதிலாக இந்தியைத் திணிக்கும் பிரசார் பாரதியின் நடவடிக்கைக்கு திமுக சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அகில இந்திய வானொலிக்கு பதில் ஆகாஷ்வானி என்ற இந்தி பெயரை பயன்படுத்த வேண்டாம். வானொலியின் ஆங்கில ஒலிப்பரப்புகளில் ஆல் இந்தியா ரேடியோ என்ற வார்த்தையே பயன்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஆகாஷ்வானிக்கு பதிலாக ’வானொலி’ என்ற இணையான வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. எனவே அகில இந்திய வானொலிக்கு பதில் ஆகாஷ்வானி என்ற இந்தி பெயரை பயன்படுத்த வேண்டாம் என்று திமுக எம்.பி. டி.ஆர்.பாலு வலியுறுத்தியுள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
“கேரளா ஸ்டோரி படத்தை அனைவரும் பார்க்க வேண்டும்”: தமிழிசை
நித்யானந்தா ஆதீனங்களை பிடித்தது இப்படித்தான்! எக்ஸ்குளுசிவ் வீடியோ!