நாடாளுமன்றத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா மற்றும் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது.
டி.ஆர்.பாலு இன்று (பிப்ரவரி 10) மக்களைவையில் பேசும்போது, “மதுரை எய்ம்ஸ் போன்று பிரதமரால் அடிக்கல் நாட்டப்பட்டு திறக்கப்படாத மருத்துவக் கல்லூரிகள் இந்தியாவில் எத்தனை உள்ளன? போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் இந்தியாவில் எத்தனை மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன?” என்ற கேள்வியை முன்வைத்தார்.
அவரது கேள்விக்கு பதிலளித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, “இந்தியாவில் எந்த ஒரு கல்லூரியும் போதிய உள் கட்டமைப்பு வசதி இல்லாமல் திறக்கப்படவில்லை. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் கட்டுமானப் பணிகள் முழுமையாக முடியவில்லை. அதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு முழுமையாக செய்து வருகிறது. இந்த விவகாரத்தை தமிழ்நாடு எம்.பி-க்கள் அரசியல் ஆக்கக்கூடாது. இது சுகாதாரம் சார்ந்த விவகாரம்.” என்று தெரிவித்தார்.
அவரது பதிலுக்கு திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்பிக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனை தொடர்து திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்.பி-க்கள் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர். மதுரை எய்ம்ஸ் தொடர்பான தகவல்களை மத்திய அரசு அவையில் அளிக்க மறுக்கிறது என்று கூறி திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக எம்.பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.
எய்ம்ஸ் விவகாரம் தொடர்பாக டி.ஆர்.பாலு, மன்சுக் மாண்டவியா இடையே நடந்த விவாதத்தால் நாடாளுமன்றத்தில் சிறிது நேரம் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
செல்வம்
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது எஸ்எஸ்எல்வி-டி2
1600 ஊழியர்களை பணிநீக்கம் செய்த யாஹூ நிறுவனம்!