திமுக தலைவரும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.
திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜன.29-ல் திமுக மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், கட்சியின் மக்களவை – மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் 29.01.2023 அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு, சென்னை அண்ணா அறிவாலயம், முரசொலி மாறன் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும்.
அப்போது, கட்சியின் மக்களவை – மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். இந்தக் கூட்டத்தில் ஒன்றிய அரசின் 2023-24 ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை குறித்த பொருளில் விவாதிக்கப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மோனிஷா
ஆஸ்கர் ரேஸில் அதிகாரப்பூர்வமாக இணைந்த ’ஆர்.ஆர்.ஆர்.’
மேம்பாலத்தில் இருந்து கொட்டிய பணமழை : கபடி வீரர் கைது!