திமுக எம்.பி ஜெகத்ரட்சகனுக்கு தொடர்புடைய 60-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று (அக்டோபர் 5) சோதனை நடத்தி வருகின்றனர்.
முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெகத்ரட்சகனின் அடையாறு வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். ஆயுதப்படை காவலர்களின் பாதுகாப்போடு இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது.
அதேபோல தி.நகரில் உள்ள உள்ள அவரது அலுவலகம், நட்சத்திர ஹோட்டல், பள்ளிக்கரணையில் உள்ள பாலாஜி பல் மருத்துவக்கல்லூரி, சொகுசு விடுதிகள், அக்கார்ட் ஹோட்டல் சேலையூர் பாரத் மருத்துவ கல்லூரி, மதுபான தொழிற்சாலைகள் உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
பூந்தமல்லி மற்றும் தண்டலம் பகுதியில் உள்ள சவீதா கல்வி குழும நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
கிச்சன் கீர்த்தனா: புதினா ஜூஸ்