சிஎஸ்ஐ திருமண்டல நிர்வாகத்தில் நடந்த மோதல் விவகாரம் தொடர்பாக திமுக எம்.பி. ஞான திரவியம் முன் ஜாமின் கோரி மாவட்ட நீதிமன்றத்தில் இன்று (ஜூன் 27) மனு அளித்துள்ளார்.
திருநெல்வேலி சிஎஸ்ஐ திருமண்டல நிர்வாகத்தின் பேராயர் பர்னபாஸ் தரப்புக்கும், செயலாளரும், திமுக எம்.பி, ஞான திரவியத்தின் ஆதரவாளருமான ஜெயசிங் தரப்புக்கும் இடையே கடந்த சில வாரங்களாக மோதல் போக்கு நீடித்து வருகிறது.
இந்நிலையில் தனது எம்.பி, பதவியை தவறாக பயன்படுத்துவதாக குற்றம்சாட்டி, சிஎஸ்ஐ திருமண்டலத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஜான் பள்ளியின் தாளாளர் பதவி மற்றும் கல்விக்குழு தொடர்பான பொறுப்பிலிருந்தும் ஞானதிரவியத்தை நீக்கி பேராயர் பர்னபாஸ் கடந்த வாரம் உத்தரவிட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த ஞானதிரவியத்தின் ஆதரவாளர்கள், நேற்று சிஎஸ்ஐ திருமண்டல அலுவலகத்துக்குச் சென்று, பேராயர் பர்னபாஸ் ஆதரவாளர்கள் மீது கடும் தாக்குதல் நடத்தினர்.
இதுதொடர்பான வீடியோ காட்சிகளும் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த மோதலில் காயமடைந்தவர், போலீசாரிடம் புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்படி, திமுக எம்.பி ஞானதிரவியம் உள்ளிட்ட 10 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட ஜான் என்பவரை தவிர்த்து மற்ற 9 பேரும் தற்போது நெல்லை மாவட்ட நீதிமன்ற நீதிபதி சீனிவாசன் முன் ஆஜராகி, முன் ஜாமின் கோரி மனுதாக்கல் செய்துள்ளனர்.
அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இந்த மனு மீதான விசாரணை வரும் ஜூன் 30ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
பிரதமரிடம் கேள்வி கேட்ட பெண் பத்திரிகையாளருக்கு மிரட்டல்: அமெரிக்கா கண்டனம்!
”கோலிக்காக உலகக் கோப்பையை வெல்ல வேண்டும்”- சேவாக்