என்னை எள்ளி நகையாடிய கோமாளிகளே… இப்போது என்ன செய்கிறீர்கள்? ஸ்பெக்ட்ரம் ஏலம் ரத்து… ஆ.ராசா கேள்வி!

Published On:

| By Kavi

license instead of bidding for spectrum

license instead of bidding for spectrum

சாட்டிலைட் இணையச் சேவைகளுக்கான ஸ்பெக்ட்ரத்திற்கு உரிமம் முறையை பின்பற்ற மத்திய அரசு திட்டமிட்டிருக்கும் நிலையில், அதனை திமுக துணை பொதுச்செயலாளரும்,  முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சருமான ஆ.ராசா கடுமையாக விமர்சித்துள்ளார்.

புதிய தொலைத்தொடர்பு மசோதா – 2023 நாடாளுமன்றத்தில் நடந்து முடிந்த குளிர்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா தொலைத்தொடர்பு துறையை நிர்வகிக்கும் 138 ஆண்டு பழமையான இந்திய தந்தி சட்டத்தை முற்றிலுமாக மாற்றுகிறது.

இந்த மசோதாவில் சாட்டிலைட் இணைய சேவைகளுக்கு ஸ்பெக்ட்ரத்தை ஒதுக்க ஏலத்திற்கு பதில் லைசென்ஸ் வழங்கும் முறையை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த மசோதாவை இணையச் சேவை வழங்கும் எலோன் மஸ்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம், அமேசானின் ப்ராஜெக்ட் கைப்பர் போன்ற அதன் உலகளாவிய சகாக்கள் மற்றும் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் ஆதரவுடன் செயல்படும் ஒன்வெப் நிறுவனங்கள் வரவேற்றுள்ளன.

இந்திய தொலைத்தொடர்பு நிறுவனமான முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு பின்னடைவாக இருக்கும் என கூறப்படுகிறது.

வெளிநாட்டு நிறுவனங்கள் உரிமம் பெறும் அணுகுமுறையைக் கோரி வருகின்றன. இந்தியா ஏலம் விடும் நடைமுறையை பின்பற்றுகிறது. இந்த முறையை மற்ற நாடுகளும் பின்பற்றும் பட்சத்தில் செலவுகள் மற்றும் முதலீடுகள் அதிகரிக்கும் என்று இந்த வெளிநாட்டு நிறுவனங்கள் கருதுகின்றன.

ஆனால்  இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ, இந்தியாவில் 5ஜி அலைக்கற்றை விநியோகத்தைப் போல, ஏல முறையே சரியானதாக இருக்கும் என்று கூறுகிறது.

லைசென்ஸ் முறையில் குறைந்த செலவில் வெளிநாட்டு இணைய சேவை வழங்குநர்களால் வாய்ஸ் கால் மற்றும் இணையச் சேவையை தர முடியும் என்பதால் இது சமமான போட்டியை உருவக்காது என்றும். ஏலம் முறையே சமநிலையை பராமரிக்கும் என்றும் ஜியோ கூறுகிறது.

தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக ஆ ராசா இருந்த போது,  2ஜி ஸ்பெக்ட்ரத்தை ஏலம் விடாமல், முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற வகையில் வழங்கப்பட்டது. இதில் 1.76 லட்சம் கோடி அரசுக்கு  இழப்பு ஏற்பட்டதாக ராசா மீது குற்றம்சாட்டப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். அதன்பின் தானே வாதாடி அந்த வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.

இந்நிலையில் ஏலத்துக்கு பதில் உரிமம் வழங்க  இருப்பது குறித்துஆ.ராசா தனது ட்விட்டர் பக்கத்தில்,   “அலைக்கற்றை ஏலம் விடப்படவில்லை என்று என்னை எள்ளி நகையாடிய கோமாளிகள் இப்போது என்ன செய்கிறார்கள் என்று இந்த தேசம் பேசட்டும்!. எலும்புத் துண்டுகளுக்கு இரையாகாத ஊடகங்கள் இருந்தால் இப்போதாவது ஏசட்டும்” என்று குறிப்பிட்டதுடன், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரையும் டேக் செய்துள்ளார். 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

வரிப்பகிர்வு: உ.பி.யை விட 3 மடங்கு குறைவாக தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்கீடு!

சேர்ந்து சுத்தும் போதெல்லாம் உங்களுக்கு கண்ணு தெரியல?… வெளுக்கும் ரசிகர்கள்!

license instead of bidding for spectrum

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel