ஒரே நாடு ஒரே தேர்தல் – அரசியலமைப்பு மீதான தாக்குதல் : ஆ.ராசா

Published On:

| By Kavi

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது அரசியலமைப்பு, ஜனநாயகம் ஆகியவற்றின் மீது நடத்தப்படும் தாக்குதல் என்று திமுக எம்.பி.ஆ.ராசா கூறியுள்ளார்.

மக்களவையில் இன்று (டிசம்பர் 17) ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவை தாக்கல் செய்ய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

முதல்முறையாக மின்னணு முறையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில்,269 பேர் ஆதரவாகவும் 196 பேர் எதிர்ப்பு தெரிவித்தும் வாக்களித்தனர்.

இதையடுத்து மக்களவையில் ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா தாக்கல் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

தொடர்ந்து இந்த மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் அனுப்பி வைத்தார்.

இந்த மசோதாவுக்கு திமுக கடும் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், திமுக துணை பொதுச்செயலாளரும் எம்.பி.யுமான ஆ.ராசா டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ இன்று தாக்கல் செய்யப்பட்ட ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா என்பது, அரசியலமைப்பு, ஜனநாயகம், கூட்டாட்சி, சுதந்திரமான நீதி அமைப்பு ஆகியற்றின் மீது நடத்தப்படும் தாக்குதலே தவிர வேறில்லை.

இவை, கே சிவானந்த் பாரதி வழக்கில் 13 உச்ச நீதிமன்ற நீதிபதிகளால் வழங்கப்பட்ட தீர்ப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளன. இந்த தீர்ப்பு இப்போதும் பொருந்தும். அதன்படி, ஒரே நாடு ஒரே தேர்தல் அரசியலமைப்புக்கு முரணானது” என்று கூறியுள்ளார்.

பிரியா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

ஒரே மாதிரி தேர்தலை கூட நடத்த முடியவில்லை : சு.வெங்கடேசன்

டிஜிட்டல் திண்ணை: எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யும் கூட்டணிக் கட்சித் தலைவர்… ஸ்டாலினுக்கு அடுத்த நெருக்கடி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share