வரும் ஜனவரி 10ஆம் தேதி திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
இது தொடர்பாக அரசு தலைமை கொறடா முனைவர் கோவி. செழியன் இன்று (ஜனவரி 5) அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், “முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் ஜனவரி 10ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது.
சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெறும் இக்கூட்டத்தில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண்டும் ” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஜனவரி 9ஆம் தேதி ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்குகிறது.
இதனால் சட்டப்பேரவை மாண்பைக் காப்பது குறித்தும், விவாதங்களில் பேசுவது குறித்தும் முதல்வர் அறிவுரை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரியா
டாஸ்மாக் நேரத்தை மாற்றியமைக்க நீதிபதிகள் பரிந்துரை!
டிஜிட்டல் பயணத்தில் இந்தியாவுக்கு உதவுவோம் : மைக்ரோசாஃப்ட் சிஇஓ!