ஆளுநர் தேநீர் விருந்தில் பங்கேற்ற திமுக அமைச்சர்கள்!
ஆளுநர் மாளிகையில் இன்று (ஜனவரி 26) நடைபெற்ற தேநீர் விருந்தில் திமுக கூட்டணி கட்சிகள் பங்கேற்காத நிலையில், திமுக சார்பில் 5 அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர்.
குடியரசு தினத்தையொட்டி ஒவ்வொரு ஆண்டும் சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து அளிக்கப்படுவது வழக்கம்.
இதில் தமிழ்நாடு முதல்வர், அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள்., உயர்நீதிமன்ற நீதிபதிகள், மூத்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் ஆகியோர் பங்கேற்பர்.
அதன்படி இந்த ஆண்டு குடியரசு தின விழா தேநீர் விருந்தை முன்னிட்டு இதில் கலந்துகொள்ள அரசியல் கட்சியினர் பலருக்கும் அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டது.
இதனையடுத்து ஆளுநர் மாளிகையில் இன்று மாலை நடைபெற்ற தேநீர் விருந்தில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் பாலகங்கா பங்கேற்றுள்ளனர்.
பாஜக கட்சி சார்பில் மத்திய அமைச்சர் எல்.முருகன், கட்சியின் மாநில துணைத்தலைவர் கரு நாகராஜன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், தமிழ்நாடு அரசுக்கும் மோதல் நிலவி வரும் நிலையில் ஆளும் திமுக சார்பில் பங்கேற்பார்களா என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் திமுக சார்பாக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ரகுபதி, தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன் மற்றும் சேகர்பாபு ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
திமுக கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆளுநர் தேநீர் விருந்தை ஏற்கெனவே புறக்கணிப்பதாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
இளையராஜா இல்லத்திற்கு கொண்டு செல்லப்படும் பவதாரிணி உடல்!
”மயிலிறகாய் வருடும் பவதாரிணி”: திரை பிரபலங்கள் இரங்கல்!
Video: தந்தை, சகோதரர்களுடன் சிரித்துப்பேசும் பவதாரிணி