திமுக அமைச்சர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் சொத்து பட்டியலை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டார்.
திமுக ஊழல் பட்டியலை ஏப்ரல் 14ஆம் தேதி வெளியிடுவதாக பாஜக தலைவர் அண்ணாமலை சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தார்.
அதன்படி இன்று (ஏப்ரல் 14) சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசி வரும் அண்ணாமலை, அமைச்சர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் சொத்து பட்டியல் அடங்கிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்பத்தினரின் பெயர்கள் முதலில் இடம்பெற்றுள்ளது.
ஜெகத்ரட்சகனின் மொத்த சொத்து மதிப்பு ரூ.50,219.37 கோடி, அமைச்சர் எ.வ.வேலு ரூ.5,442.39 கோடி, அமைச்சர் கே.என்.நேரு 2,495.14 கோடி, கனிமொழி எம்.பி. 830.33 கோடி, கலாநிதி மாறன் 12,450 கோடி, திமுக எம்.பி.டி.ஆர்.பாலு, 10,841.10 கோடி, கதிர் ஆனந்த் எம்.பி 579.58 கோடி, கலாநிதி வீராசாமி 2923.29 கோடி, அமைச்சர் பொன்முடி 581.20 கோடி, திமுக கட்சி 1,408.94 கோடி வைத்திருப்பதாக இடம் பெற்றுள்ளது.
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோரின் பெயரும் இடம் பெற்றுள்ளது.
வீடியோவை காண: https://www.facebook.com/MinnambalamNews/videos/241267261722445
பிரியா
ரஃபேல் வாட்ச் பில்லை காட்டிய அண்ணாமலை
வரலாறு காணாத உச்சத்தில் தங்கம் விலை!