முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று (செப்டம்பர் 26) புழல் சிறையில் இருந்து வெளியே வர உள்ள நிலையில் அங்கு அவரது ஆதரவாளர்கள் குவிந்துள்ளதால் அப்பகுதியை சுற்றிலும் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.
சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி கடந்தாண்டு அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். கடந்த ஓராண்டாக அவர் புழல் சிறையில் இருந்த நிலையில் அவர் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த வழக்கை விசாரித்து வந்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு, நீண்ட நாட்களாக ஒருவரை விசாரணை என்ற பெயரில் சிறையில் தொடர்ந்து வைத்திருக்க முடியாது என்று கூறி இன்று செந்தில் பாலாஜிக்கு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து பிற்பகல் 3 மணி முதல் புழல் சிறை முன்பு திமுகவினரும், செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்களும் அவரை வரவேற்க பெருமளவில் குவிந்து வருகின்றனர்.
சிறை வாயில் முன்பு இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடி வருகின்றனர். மேலும் மயிலாட்டம், ஒயிலாட்டம், பறையிசை கலைஞர்கள் மூலம் அவரை வரவேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே புழல் சிறையில் உள்ள செந்தில்பாலாஜியை ஜாமீனில் வெளியே விடுவதற்கான பணியை சிறைத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் பெருமளவில் திமுகவினர் புழல் சிறை முன்பு திரண்டு வருவதால் திருப்பதி செல்லக்கூடிய பிரதான சாலையான அப்பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.
மேலும் பலத்த போலீசார் பாதுகாப்பு அங்கு போடப்பட்டுள்ள நிலையில், செந்தில் பாலாஜியை உற்சாகமாக வரவேற்க திமுக தொண்டர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
ராதாரவி, சரத்குமாரே பரவாயில்லை – விஷாலுக்கு எதிராக நடிகர் உதயா காட்டம் ஏன்?
செந்தில் பாலாஜியை சிறையில் இருந்து ஜாமினில் விடுவிக்க உத்தரவு!
Naadu enga poguthune therila. Intha sombugalellam puduchu ulla pottathan urupadum.