”தமிழ்நாட்டில் உள்ள அனைவருக்கும் தமிழ் முக்கியம். அதனை விட்டுக்கொடுத்து எந்த ஆட்சியையும் நடத்த வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை” என்று திமுக எம்பி டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.
திமுக அரசின் 2 ஆண்டு கால சாதனை விளக்க மாபெரும் பொதுக் கூட்டம் பல்லாவரத்தில் இன்று (மே 7) நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.
முன்னதாக கூட்டத்தில் திமுக பொருளாளரும், எம்.பி,யுமான டி.ஆர்.பாலு பேசுகையில், ”திமுக ஆட்சியின் இந்த இரண்டு ஆண்டு சாதனைகளை இந்த ஒரு கூட்டத்தில் சொல்லி முடிப்பது கடினம்.
மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயணம், புதுமைப்பெண் திட்டம், தொழில் முதலீடு, கடன் தள்ளுபடி என இந்த 2 ஆண்டு காலத்தில் முதல்வர் ஸ்டாலின், சொன்னது, சொல்லாதது என எல்லாவற்றையும் நிறைவேற்றி கொண்டிருக்கிறார்.
நமது கொள்கைகளுக்கு எதிரானவரும், நாட்டின் பிரதமருமான மோடியே, முதல்வர் ஸ்டாலினை மனதார பாராட்டுவதை நான் நாள்தோறும் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.” என்றார்.
தொடர்ந்து அவர், ”கடந்த 3ஆம் தேதி மத்திய ஒலிப்பரப்புத் துறை அமைச்சகம் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இனிமேல் ’ஆல் இந்தியா ரேடியோ’ என்று சொல்லக்கூடாது என்றும், அதற்கு பதிலாக ’ஆகாஷ்வாணி’ என்று சொல்லவேண்டும் என்றும் கட்டளையிட்டுள்ளது.
நாம் எப்படி தமிழ் தமிழ் என்கிறோமோ, அவர்கள் இந்தியை எப்படியாவது திணித்துவிட வேண்டும் என்பதில் செயலாற்றி வருகிறார்கள்.
தமிழன் என்ன இளிச்சவாயனா? 1965ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதி முன்னின்று நடத்திய மொழிப்போர் போராட்டம் மறந்துவிட்டதா?
இதைப்பற்றி கேட்கும்போது ரவீந்தரநாத் தாகூரே ஆகாஷ்வாணி என்று தெரிவித்துள்ளார் என்கிறார்கள். அப்படியென்றால் பாரதியார், ’யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனியாவதெங்கும் காணோம்’ என்றுள்ளாரே! பாரதியார் என்ன தேசிய கவிஞர் இல்லையா?
அவர்களுக்கு எப்படி இந்தி முக்கியமோ… தமிழ்நாட்டில் உள்ள அனைவருக்கும் தமிழ் முக்கியம். இந்த தமிழை விட்டுக்கொடுத்து எந்த ஆட்சியையும் நடத்த வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. அப்படிப்பட்ட நிலையும் எங்களுக்கு வராது.
திமுக தலைவர் ஸ்டாலினின் ஒற்றை உத்தரவுக்காக தொண்டர்கள் காத்திருக்கின்றனர். அவர் ஒரு வார்த்தைக் கூறினால் போதும், இந்த அகிலமே அதிரும் அளவுக்கு மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.
கிறிஸ்டோபர் ஜெமா
விபத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய பின்னணி பாடகி!
அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்த குஜராத்: சதத்தை தவறவிட்ட ஓப்பனிங் கூட்டணி!
கொஞ்சம் கூட வெக்கமே இருக்காதா! இருக்கிற ஆயிரம் கையாலாகதனத்தை மறைக்க இந்தியை வைத்து அரசியல்!
மானக்கேடு..