ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (பிப்ரவரி 8) காலை முதல் நடைபெற்று வருகிறது. Dmk leading fifth round
தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து, திமுக வேட்பாளர் சந்திரகுமார் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.
ஐந்தாவது சுற்று முடிவில் சந்திரகுமார் 37,001 வாக்குகள் வாங்கியுள்ளார். நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமி 7,668 ஓட்டுக்கள் வாங்கியுள்ளார். வாக்கு வித்தியாசம் 29,333 ஆகும்.
சந்திரகுமார் தொடர்ந்து முன்னிலை வகித்து வருவதால் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.