மிசாவையே பார்த்தவர்கள் ஒன்றிய அரசின் உருட்டல் மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் என்று அமைச்சர் உதயநிதி கூறியுள்ளார்.
போக்குவரத்து துறையில் வேலைவாங்கித் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட வழக்கில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் சென்னை வீடு உள்பட இடங்களில் நேற்று அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் தொடர் விசாரணைக்குப் பிறகு நள்ளிரவு அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் திடீரென கைது செய்தனர்.
அப்போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார்.
இந்நிலையில், அமைச்சர்கள் எ.வ.வேலு, உதயநிதி, சேகர்பாபு, ரகுபதி, மா.சுப்பிரமணியன் , எம்.பி. என்.ஆர்.இளங்கோ உள்ளிட்டோர் அமைச்சர் செந்தில் பாலாஜியை பார்ப்பதற்கு ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனைக்கு சென்றனர்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி, “பாஜக அரசின் உருட்டல் மிரட்டலுக்கு திமுக அஞ்சாது.
திராவிட முன்னேற்றக் கழகம் மிசாவையே பார்த்தது. அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கை சட்டப்படி சந்திப்போம்” என்றார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்