மதுரையில் நாளை நடைபெற இருந்த உண்ணாவிரத போராட்ட தேதியை அம்மாவட்ட திமுக மாற்றி அறிவித்துள்ளது.
அதிமுக ஆகஸ்ட் 20 ஆம் தேதி மதுரையில் மாநாடு நடைபெறும் என்று அறிவித்தது. இந்நிலையில் நீட் தேர்வுக்கு எதிராகவும், ஆளுநருக்கு எதிராகவும் திமுக சார்பில் ஆகஸ்ட் 20 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
அதிமுக மாநாடு பற்றிய செய்தி எந்த ஊடகங்களிலும் வரக்கூடாது என்பது தான் திமுகவின் நோக்கம். அதனால் தான் நாங்கள் மாநாடு நடத்தும் அதே தேதியில் திமுகவினர் உண்ணாவிரத போராட்டம் நடத்துகிறார்கள் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று கூறியிருந்தார்.
இந்நிலையில், மதுரையில் நாளை நடைபெற இருந்த உண்ணாவிரத போராட்ட தேதியை அம்மாவட்ட திமுக மாற்றி அமைத்துள்ளது.
அதன்படி, நாளை நடைபெற இருந்த உண்ணாவிரத போராட்டம் ஆகஸ்ட் 23 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், இந்த போராட்டம் பழங்காநத்தம் ரவுண்டானா நடராஜ் திரையரங்கம் அருகில் நடைபெறும் என்றும் மதுரை மாவட்ட திமுக அறிவித்துள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
அதிமுக மாநாடு: அண்ணாவின் பொன்மொழியால் விமர்சிக்கும் டிடிவி
உயிர்களை காவு வாங்கிய கொசு விரட்டி?: 3 சிறுமிகள் உட்பட நால்வர் பலி!