திமுக ஆட்சி – எடப்பாடி சொன்ன அமாவாசை கணக்கு!

அரசியல்

“திமுக ஆட்சி பொறுப்பேற்று இந்த 15 மாதங்களில், 15 அமாவாசைகள் போய்விட்டன என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இன்று (செப்டம்பர் 6) தொண்டர்கள் மத்தியில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “ஏதோ ஒரு சூழ்நிலையால் திமுக ஆட்சிக்கு வந்துவிட்டது.

தேர்தல் நேரத்தில் பல்வேறு வாக்குறுதிகளை அள்ளி வீசியது திமுக. இன்று ஆட்சிக்கு வந்தபிறகு அதில் பாதிகூட நிறைவேற்றவில்லை. மக்களுக்கு வாக்குறுதி அளித்தார்கள்; வாக்களித்த பின்பு மக்களை ஏமாற்றிவிட்டார்கள்.

திமுகவுக்கு எப்போதும் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஒரு பேச்சு; வந்தபிறகு ஒரு பேச்சு. திமுகவினர் தங்கள் குடும்பத்துக்கு என்ன வரும் என்றுதான் கணக்கிட்டுக் கொண்டிருக்கிறார்களே தவிர, மத்திய அரசு தரும் நிதியையும் எள்ளளவும் செய்யவில்லை. அதுபோல் அதிமுக ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்களையும் நிறைவேற்றவில்லை.

இந்த ஆட்சியில் தமிழகம் முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலேயே அதிகமான தார்ச்சாலைகள் உருவான மாநிலம் தமிழகம். அதை உருவாக்கிக் கொடுத்தது அதிமுக ஆட்சி.

அப்படியான தார்ச்சாலைகளை உருவாக்கி போக்குவரத்து நெரிசலைக் குறைத்தோம். ஆனால்,

இன்றைக்கு திமுக அரசு குடும்பம் ஒன்றை மட்டுமே பார்த்துக்கொண்டிருக்கிறது. நாட்டு மக்களின் பிரச்சினைகள் குறித்து கவலைப்படுவதில்லை. விசைத்தறியால் பல குடும்பங்கள் கஷ்டத்தில் உள்ளன.

அதற்கு முக்கியக் காரணம் நூல் விலை. அதை குறைக்க இந்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. திமுக அரசைப் பொறுத்தவரை அமைச்சர்களோ, அரசு அதிகாரிகளோ யாரும் இல்லை. அனைத்துக்கும் குழுதான்.

குழுவை அமைத்துத்தான் எந்தத் திட்டத்தையும் செயல்படுத்துவார்களாம். மு.க.ஸ்டாலின் 38 அறிவிப்புகள் கொண்டுவந்து 38 குழு அமைத்துவிட்டார்.

இந்த அரசங்கத்துக்கு குழு அரசாங்கம் என்று பெயர் வைத்துவிடலாம். இப்படி எல்லாவற்றுக்கும் குழு அமைத்தால் எப்போது திட்டங்களைச் செயல்படுத்துவது? திமுக ஆட்சி பொறுப்பேற்று 15 மாதங்கள் ஆகிவிட்டன.

ஆக, 5 ஆண்டுகளில் 4ல் ஒரு பாகம் போய்விட்டது. 5 ஆண்டுகளில் வரும் 60 அமாவாசைகளில் 15 அமாவாசை போய்விட்டது. இன்னும் 45 அமாவாசை மீதம் இருக்கிறது.

குழு அமைக்கவே திமுகவுக்கு 15 மாதம் ஆகிறது. அப்படியென்றால், திட்டத்தை நிறைவேற்றக்கூடாது என்பதற்காகவே குழு அமைக்கப்படுகிறது.

ஆக, திமுக குழு அமைப்பதன் மூலம் ஏமாற்றிவருகிறது. இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் உரிமைத் தொகை தருவதாகச் சொன்னார்கள்.

ஆனால், கடைசிவரை தரமாட்டார்கள். அதுபோல் விலைவாசி உயர்வால் ஏழை எளிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்றார்.
ஜெ.பிரகாஷ்

தூத்துக்குடி படுகொலையும் எடப்பாடி பழனிசாமியும்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

1 thought on “திமுக ஆட்சி – எடப்பாடி சொன்ன அமாவாசை கணக்கு!

  1. எதிர் கட்சின்னா குறை சொல்லுவது தானா…… மாதம் 1000/= தருவதாக அறிவித்து விட்டது அரசு அதனை வரவேற்று ஓர் அறிவிப்பு விடலாமே, பெண்களுக்கு இலவச பாஸ் கொடுத்ததை எதிர் கட்சி வாழ்த்துக்கள் சொன்னீரா…

    15 அமா வசை போய்ட்டு இனி வரும் அமாவாசையில் உங்களுக்கு ஒரு தீர்ப்பு வருமுன்னு நினைக்கிறாங்க மக்கள்,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *