திமுகவிலிருந்து விலகிய சுப்புலட்சுமி ஜெகதீசன் : காரணம் என்ன?

அரசியல்

அண்ணா பிறந்த தினமான செப்டம்பர் 15ஆம் தேதி, திமுக முப்பெரும் விழா விருதுநகரில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சுப்புலட்சுமி ஜெகதீசன் கலந்து கொள்ளவில்லை.

இதனால் திமுக துணைப் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து சுப்புலட்சுமி ஜெகதீசன் விலகியதாகத் தகவல் வெளியான நிலையில், திமுகவிலிருந்து ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதி விலகுவதாகத் தலைமைக்குக் கடிதம் அனுப்பி விட்டேன் என்று சுப்புலட்சுமி ஜெகதீசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

subbulakshmi jagadeesan resign from party

இதுகுறித்து இன்று (செப்டம்பர் 20) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2009ல் எனது நாடாளுமன்ற உறுப்பினர் பணிக் காலம் நிறைவு பெற்றதற்குப் பிறகு மீண்டும் தேர்தலில் போட்டியிடாமல் கட்சி பணிகளை மட்டும் மேற்கொள்வது என்ற எனது முடிவைத் தலைவர் கலைஞர் அவர்களிடம் தெரிவித்துவிட்டேன்.

தலைவர் கலைஞர் மறைவுக்குப் பின் அவர்களின் விருப்பத்தின்படி, தலைவர் தளபதி அவர்களை முதலமைச்சர் ஆக்கும் நோக்கத்துடன் கழக பணிகளை மட்டும் செய்து வந்தேன்.

subbulakshmi jagadeesan resign from party

2021 சட்டமன்ற பொதுத் தேர்தலில் கழகம் மகத்தான வெற்றி பெற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராகப் பொறுப்பேற்று, அரசு, கட்சிப் பணிகளையும் நாடே பாராட்டும் வகையில் சிறப்பாகச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்.

இது எனக்கு மிகுந்த மனநிறைவைத் தருகிறது.

இந்த நிறைவோடு அரசியலிலிருந்து ஓய்வு பெற வேண்டும் என்ற எனது நீண்ட நாள் விருப்பத்தின் அடிப்படையில்,

ஆகஸ்டு 29ம் தேதியன்று பதவியிலிருந்தும், கட்சியிலிருந்தும் விலகுவதாக எனது விலகல் கடிதத்தை தலைவர் தளபதி அவர்களுக்கு அனுப்பிவிட்டேன்” என்று சுப்புலட்சுமி ஜெகதீசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

செல்வம்

சுப்புலட்சுமி ஜெகதீசன் கட்சிப் பதவியிலிருந்து ராஜினாமா?: 4 முக்கிய காரணங்கள்!

டிஜிட்டல் திண்ணை: திமுகவின் புதிய துணைப் பொதுச் செயலாளர்கள் யார்? முப்பெரும் விழா க்ளூ!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
2
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *