ஸ்டாலினை பார்த்து கலைஞரும் பேராசிரியரும் சொன்னது இதுதான் : எ.வ.வேலு

Published On:

| By Selvam

மு.க.ஸ்டாலின் திமுகவிற்கு நூறாண்டு காலம் தலைமை தாங்க வேண்டும் என்று திருவண்ணாமலை திமுக மாவட்டச் செயலாளரும், பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

திமுக 15ஆவது பொதுக்குழு கூட்டம் இன்று காலை 10 மணிக்கு சென்னை அமைந்தகரையில் துவங்கியது.

திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் இரண்டாவது முறையாக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பொதுக்குழுவில் திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் எ.வ.வேலு பேசும்போது, ” திமுக கழகத்தை வழிநடத்திச் செல்லக்கூடிய முழு பக்குவத்தையும் பெற்றவர் மு.க.ஸ்டாலின் தான் என்று தலைவர் கலைஞர் அடிக்கடி கூறுவார்.

மு.க.ஸ்டாலின் இயக்கப் பணியிலே முழு அர்ப்பணிப்போடு ஓய்வின்றி உழைத்து கொண்டிருப்பதை நான் பார்த்து வியந்திருக்கிறேன் என்று பேராசிரியர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

தளபதி ஸ்டாலின் இந்த இயக்கத்திற்கு நூறாண்டு காலம் தலைமை தாங்க வேண்டும். இந்த இயக்கத்தின் முதல் தலைமுறையாக பெரியார், இரண்டாவது தலைமுறையாக பேரறிஞர் அண்ணா, மூன்றாவது தலைமுறையாக தலைவர் கலைஞர், நான்காவது தலைமுறையாக ஸ்டாலின் அவர்கள் இருக்கிறார்.

இந்தியாவே வியக்கக்கூடிய வகையில் திராவிட மாடல் ஆட்சியை ஸ்டாலின் நடத்தி வருகிறார்.

எங்களுக்காக 24 மணி நேரமும் உழைத்துக்கொண்டிருக்கிற தளபதி நூறு ஆண்டுகள் வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்தார்.

செல்வம்

‘கட்டளையிடுங்கள்… 2024 தேர்தலிலும் வெற்றி உறுதி’ : உதயநிதி

திமுக தணிக்கை குழு உறுப்பினர்கள் நியமனம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel