பொதுக்குழு ஏற்பாடு: ஸ்டாலின் ஆய்வு!

Published On:

| By Kalai

திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ள இடத்தில் செய்யப்பட்டு வரும் ஏற்பாடுகளை அக்கட்சி தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டார்.

திமுக பொதுக்குழு கூட்டம் வருகிற ஞாயிற்றுக்கிழமை  காலை 9 மணிக்கு நடைபெற இருக்கிறது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் திமுக தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் மற்றும் 4 தணிக்கைக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

இந்த பதவிகளுக்கு இன்று(அக்டோபர் 7) காலை  காலை 10 மணி முதல் 5 மணி வரை வேட்புமனுக்கள் தாக்கல் செய்யலாம் என்று திமுக தலைமை அறிவித்துள்ளது.

அதன்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று(அக்டோபர் 7) வேட்புமனுத்தாக்கல் செய்ய இருக்கிறார்.

இந்நிலையில் அதற்கு முன்னதாக மு.க.ஸ்டாலின்  பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ள அமைந்தகரை  செயின்ட் ஜார்ஜ் பள்ளி விங்க்ஸ் கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்றுவரும் பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

கலை.ரா

இலவச திட்டங்கள் : மத்திய அரசு மீது பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் காட்டம்!

”யார் வெற்றி பெற்றாலும் காங்கிரஸ்க்கு தான் அந்த வெற்றி சேரும்” – சசிதரூர்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share