காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவால் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கு நாளை (பிப்ரவரி 5) இடைத்தேர்தல் நடைபெறுகிறது. DMK gave Rs 1000 each to voters
முக்கிய எதிர்க்கட்சிகள் போட்டியிடாத நிலையில், திமுக மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதனால் கடந்த முறை இடைத் தேர்தல் நடந்தபோது வாக்காளர்களுக்கு அளிக்கப்பட்ட பரிசு மழை இம்முறை பெய்யவில்லை. DMK gave Rs 1000 each to voters
பிரச்சாரத்துக்கு சென்ற திமுகவினரிடமே, இதுபற்றி மக்கள் கேள்விகள் கேட்ட நிலையில்… பிப்ரவரி 2, 3 தேதிகளில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்திருக்கின்றனர் திமுக தரப்பில்.
பட்டுவாடா செய்ய குழு!
இதற்காக சுமார் 25 குழுக்கள் அமைக்கப்பட்டன. ஒவ்வொரு பூத் கமிட்டியில் இருந்து ஒரு நபர், அந்த வார்டைச் சேர்ந்த ஒருவர், கணக்கு சரிபார்க்க ஒருவர், பணம் வைத்துக்கொள்ள இருவர் என ஒவ்வொரு குழுவிலும் 5 பேர் நியமிக்கப்பட்டனர்.
இவர்கள் குறிப்பிட்ட ஒரு வீதியில் உள்ள வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கிறார்கள் என்றால், முதலில் அந்த வீதியில் இருக்கும் திமுக காரரின் வீட்டுக்கு சென்றுவிட்டனர். பின்னர், அந்த குழுவைச் சேர்ந்தவர்கள், வீடு வீடாக சென்று பத்து, பத்து பேராக அந்த திமுக புள்ளியின் வீட்டுக்கு அழைத்து வந்தனர்.

அவர்களிடம் வாக்காளர் அட்டை இருக்கிறதா, பூத் சிலிப்பில் அந்த வாக்காளரின் பெயரும், அவர்களுடைய் குடும்பத்தினரின் பெயரும் இருக்கிறதா என சரிபார்த்தனர்.
பின்னர் அவர்களிடம், யாருக்கு ஓட்டு போடுவீங்க… உங்கள் வீட்டில் எத்தனை வாக்காளர்கள் இருக்கிறார்கள் என்று கேட்டு, ஒரு தலைக்கு 1000 ரூபாயை இரு 500 ரூபாய் நோட்டுகளாக கொடுத்து அனுப்பிவிட்டனர்.
முதலில் 10 பேர் வாங்கிக் கொண்டு சென்ற பிறகு அடுத்த 10 பேர் அழைத்து வரப்பட்டனர். இப்படித்தான், கடந்த இரு நாளாக சரளமாக பணப்பட்டுவாடா நடந்திருக்கிறது.
அந்தப் பக்கம் போயிடாதீங்க…
திமுக பணப் பட்டுவாடா செய்வதை பார்த்துக்கொண்டு தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட பறக்கும் படை கண்டும் காணாமல் அமைதியாக இருந்தது என்கிறார்கள் நாம் தமிழர் கட்சியினர்.

ஈரோடு கிழக்கில் தேர்தல் பணிகளை செய்த அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் இனியன் ஜான், பிப்ரவரி 3 மாலை பிரச்சாரம் முடிந்த நிலையில் டூவிலரில் இருந்த கொடியை கழற்றி வைத்திருந்தார். அப்போது கருங்கல்பாளையத்தில் தேர்தல் பறக்கும் படையினர் வந்துகொண்டிருந்தனர். அதில் ஒருவரை பார்த்து, ’சார், கொஞ்சம் பொறுமையா போங்க… அந்த பக்கம் பணம் கொடுத்துக்கிட்டிருக்காங்க’ என்று சொல்லியிருக்கிறார். இனியன் ஜான் திமுககாரர் என நினைத்துக்கொண்ட அந்த பறக்கும் படை அதிகாரி, கட்டை விரலை உயர்த்தி தம்ஸ் அப் காட்டி, ‘ஒ.கே. சார்… ஒ.கே. சார்’ என்று மெல்ல கூறியிருக்கிறார்.
’நீயெல்லாம் ஒரு தேர்தல் ஆணையம்… ஏன்யா உனக்கெல்லாம் சம்பளம்?’ என்று இனியன் ஜான் கோபமாக கேட்டுக் கொண்டே… தன் கொடியை எடுத்துக் காட்டியுள்ளார். அதன் பிறகுதான் அவர் நாம் தமிழர் கட்சி என்பதே அந்த அதிகாரிக்கு தெரிந்திருக்கிறது. வியர்த்துப் போய் முகத்தை அந்தப் பக்கம் திருப்பிக் கொண்டார் அந்த அதிகாரி. DMK gave Rs 1000 each to voters
அதிமுக, பாஜகவுக்கு டோர் டெலிவரி!
இன்னொரு பக்கம், பணம் வாங்க வராத அதிமுக, பாஜக நிர்வாகிகளின் வீடுகளுக்கே சென்ற திமுகவினர், அவர்களிடம் பணத்தை கொடுத்து, ’இந்தமுறை திமுகவுக்கு ஒட்டுப் போடுங்க, அப்படி போடலைன்னா கூட பரவாயில்ல… சீமானுக்கு போட்டுடாதீங்க…’ என்று சொல்லிவிட்டு வந்திருக்கின்றனர்.
இவ்வாறாக எந்த தடையும் இல்லாமல், ஈரோடு கிழக்கில் பணப் பட்டுவாடா நடந்திருக்கிறது.
மொத்தமாக பூத் செலவு, வாக்காளர்களுக்கு பணம் என சுமார் 25 கோடி வரை செலவாகியிருப்பதாக ஈரோடு கிழக்கு திமுக வட்டாரத்தில் கூறுகிறார்கள். DMK gave Rs 1000 each to voters