‘திமுகவினரின் ரூ.5600 கோடி மதிப்பிலான 3 ஊழல் குறித்த ஆதாரங்களை ஆளுநரிடம் வழங்கியுள்ளேன் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி, திமுக எம்பி டி.ஆர்.பாலு மற்றும் சில அமைச்சர்களின் சொத்து விவரங்கள் பட்டியலை திமுக பைல்ஸ் என்ற பெயரில் வீடியோவாக வெளியிட்டார்.
இந்த பட்டியல் வெளியிட்ட பிறகு முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி, திமுக எம்.பி.டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் அண்ணாமலை மீது அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
இந்த சூழலில் இரண்டாவது திமுக பைல்ஸ் 2-ஐ வெளியிடுவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று ஆளுநரைச் சந்தித்து அதற்கான ஆவணங்களை ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் வழங்கியுள்ளார்.
இதுகுறித்து அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், “இன்று, தமிழ்நாடு பாஜக மூத்த தலைவர்களுடன், தமிழக ஆளுநர் ரவியை சந்தித்தோம்.
ஆளுநரிடம், திமுக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுக முதல் குடும்பத்துடன் தொடர்புள்ள பினாமி தகவல்கள் அடங்கிய, திமுக ஃபைல்ஸ் பகுதி 2 ஆவணங்களையும், மேலும் ரூ.5600 கோடி மதிப்பிலான 3 ஊழல் குறித்த ஆதாரங்களையும் வழங்கி, இது தொடர்பாக அவர் தலையிட்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளோம்” என்று பதிவிட்டுள்ளார்.
பிரியா
“விவசாயிகளிடம், என்.எல்.சி நிர்வாகம் அத்துமீறினால்…” : வேல்முருகன் கண்டனம்!
மீண்டும் மோடி பிரதமரானால் சந்திர மண்டலம் தான் – சீமான்
நல்லதே நடக்கட்டும்… நெஞ்சார்ந்த வாழ்த்துக்களுடன்… உங்கள் நாஞ்சில் சிவா.