எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதை கண்டித்து அதிமுக சார்பில் மதுரையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆர்.பி.உதயகுமார் வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக திமுக சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
மதுரை விமான நிலையத்தில் அமமுக வெளிநாடு வாழ் தமிழர்கள் நலப்பிரிவு செயலாளர் ராஜேஸ்வரன் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதனை கண்டித்து, மார்ச் 13-ஆம் தேதி மதுரையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்,
“எடப்பாடி பழனிசாமி மீது பொய்வழக்கு பதியும் இது போன்ற சர்வாதிகார போக்கு தொடரும் என்றால் மதுரையில் அதிமுகவினர் மனித வெடிகுண்டாக மாறுவோம்” என பேசியிருந்தார்.
இந்நிலையில், வன்முறையை தூண்டும் விதமாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாக அவரை கைது செய்யக் கோரி,
மதுரை சம்மட்டிபுரம் திமுக பகுதி கழக செயலாளர் தவமணி சுப்ரமணியபுரம் காவல்நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
செல்வம்