ஆகஸ்ட் 5-ல் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!

அரசியல்

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆகஸ்ட் 5-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கலைஞர் நூற்றாண்டு விழா தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஆகஸ்ட் 5-ஆம் தேதி காலை 10.30 மணியளவில் காணொலி காட்சி வாயிலாக நடைபெறும். இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில் திமுக தீவிரமாக தயாராகி வருகிறது. அந்தவகையில் கடந்த ஜூலை 26-ஆம் தேதி 15 மாவட்டங்களை சேர்ந்த திமுக வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறை கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், “நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்காக திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் உழைக்க வேண்டும். அரசின் திட்டங்களை மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும்” என்று ஸ்டாலின் பேசியிருந்தார். இந்தசூழலில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை கொண்டாடுவது மற்றும் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்து விவாதிக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

செல்வம்

11-வது நாளாக முடக்கம்: மக்களவை 2 மணி வரை ஒத்திவைப்பு!

தீரன் சின்னமலை நினைவு நாள்: ராமதாஸ் கோரிக்கை!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *