திமுக மாவட்டச் செயலாளர்கள் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 22 ஆம் தேதி முதல் மாவட்ட வாரியாக மனுத் தாக்கல் செய்ய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திமுகவின் 15ஆவது பொதுத் தேர்தல் நடைபெற இருக்கின்ற பின்வரும் புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் அவைத் தலைவர், செயலாளர், மூன்று துணைச் செயலாளர்கள்,
ஆகிய பொறுப்புகளுக்குப் போட்டியிடுவோர் அதற்கென உள்ள படிவத்தில் முறைப்படி பூர்த்தி செய்து கீழே குறிப்பிட்டுள்ள நாட்களில் பொறுப்பு ஒன்றுக்கு 25,000 ரூபாய் கட்டணமாகத் தலைமை கழகத்தில் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “வேட்பு மனு விண்ணப்பப் படிவம் ஒன்றுக்கு 1000 ரூபாய் செலுத்தி தலைமைக் கழகத்தில் பெற்றுக்கொள்ளலாம்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் செப்டம்பர் 22 – 25 வரை வேட்பு மனுத் தாக்கல் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.




டிஜிட்டல் திண்ணை: திமுகவின் புதிய துணைப் பொதுச் செயலாளர்கள் யார்? முப்பெரும் விழா க்ளூ!
நயன்தாராவுடன் பிறந்தநாள் கொண்டாடிய விக்னேஷ் சிவன்