விரைவில் திமுக பொதுக்குழு: மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

அரசியல்

திமுக மாவட்ட அமைப்பு தேர்தல் தொடர்பாக அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் இன்று (செப்டம்பர் 19) நடைபெற்றது ‌

தமிழ்நாடு முழுவதும் 76 அமைப்பு மாவட்டங்களாக இருந்ததை நிர்வாக வசதிக்காக 72 மாவட்டங்களாக பிரித்து மறுசீரமைக்கப்பட்டுள்ளது.

இந்த 72 மாவட்டங்களில் அவைத் தலைவர், மாவட்ட செயலாளர், 3 துணைச் செயலாளர்கள், பொருளாளர் மற்றும் தலைமைக் கழகத்தால் மாவட்ட வாரியாக அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையின் அடிப்படையில் தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் , பொதுக்குழு உறுப்பினர்கள் ஆகிய பொறுப்புக்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற உட்கட்சி தொடர்பான கூட்டத்தில் பொதுச் செயலாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச் செயலாளர்கள் பொன்முடி, ஆ.ராசா, டி.கே.எஸ் இளங்கோவன், ஆர்.எஸ். பாரதி, ஆகியோர் பங்கேற்றனர்.

ஏற்கனவே பேரூராட்சி, ஒன்றியம் மற்றும் நகரம், மாநகரங்களுக்கான நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தற்போது மாவட்ட அமைப்பு தேர்தலுக்கான தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் 25-ம் தேதியோடு மாவட்ட அமைப்புக்கான நிர்வாகிகளும் அறிவிக்கப்பட உள்ளனர்.

இந்நிலையில், நிர்வாகிகள் அறிவிக்கப்பட்ட பின்னர் பொதுக்குழுவை கூட்டுவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் இன்றைய ஆலோசனை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அக்டோபர் 2வது வாரத்தில் பொதுக்குழு கூட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக ,செப்டம்பர் 22 ஆம் தேதி கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், சிவகங்கை, இராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, மதுரை ஆகிய மாவட்டங்களிலும்,

செப்டம்பர் 23 ஆம் தேதி நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கோவை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம், கரூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களிலும்,

செப்டம்பர் 24 ஆம் தேதி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருவாரூர், நாகை, தஞ்சை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும்,

25ஆம் தேதி வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் வேட்பு மனு தாக்கல் நடைபெற உள்ளது.

கலை.ரா

விரிவடைகிறது சென்னை மாநகரம்: எங்கிருந்து எதுவரை?

+1
1
+1
0
+1
0
+1
1
+1
0
+1
1
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *