திமுகவில் 4 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டு புதிய மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல 4 மாவட்டச் செயலாளர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதன்படி திமுகவின் மாவட்ட அமைப்பில் இடம்பெற்றிருந்த சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை மாறுதலுக்கு உள்ளாகியிருக்கிறது.
இதுகுறித்து இன்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று (பிப்ரவரி 13) அறிவிப்பு வெளியிட்டுள்ளார். dmk district incharge appointed
அதன்படி நியமனம் பெற்ற மாவட்ட பொறுப்பாளர்களின் விவரம் பின்வருமாறு,
ஈரோடு : dmk district incharge appointed
ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி ஆகிய சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய ஈரோடு தெற்கு மாவட்டச் செயலாளராக அமைச்சர் முத்துசாமி தொடர்கிறார்.
அந்தியூர், பவானி சாகர், கோபிசெட்டிப்பாளையம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய ஈரோடு வடக்கு மாவட்ட பொறுப்பாளராக என்.நல்லசிவம் தொடர்கிறார்.
பவானி, பெருந்துறை ஆகிய சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய ஈரோடு மத்திய மாவட்ட பொறுப்பாளராக தோப்பு வெங்கடாசலம் நியமிக்கப்பட்டுள்ளார்.
திருப்பூர் : dmk district incharge appointed
பல்லடம், திருப்பூர் தெற்கு ஆகிய சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய திருப்பூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக க.செல்வராஜ் எம்.எல்.ஏ நியமிக்கப்பட்டுள்ளார்.
காங்கேயம், தாராபுரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய திருப்பூர் மேற்கு மாவட்ட பொறுப்பாளராக அமைச்சர் சாமிநாதன் தொடர்கிறார்.
அவிநாசி, திருப்பூர் வடக்கு ஆகிய சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய திருப்பூர் வடக்கு மாவட்ட பொறுப்பாளராக என்.தினேஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய திருப்பூர் தெற்கு மாவட்ட பொறுப்பாளராக இல.பத்மநாபன் நியமிக்கப்பட்டுள்ளார்.

விழுப்புரம் :
செஞ்சி, மயிலம், திண்டிவனம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறுப்பாளராக முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் நியமிக்கப்பட்டுள்ளார்.
திருக்கோவிலூர், விக்கிரவாண்டி ஆகிய சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய விழுப்புரம் தெற்கு மாவட்ட பொறுப்பாளராக கெளதம சிகாமணி தொடர்கிறார்.
விழுப்புரம், வானூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய விழுப்புரம் மத்திய மாவட்ட பொறுப்பாளராக ஆர்.லட்சுமணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
மதுரை :
மேலூர், சோழவந்தான், மதுரை கிழக்கு, மதுரை மேற்கு ஆகிய சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய மதுரை வடக்கு மாவட்ட பொறுப்பாளராக அமைச்சர் மூர்த்தி தொடர்கிறார்.
மதுரை வடக்கு, மதுரை மத்திய, மதுரை தெற்கு ஆகிய சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய மதுரை மாநகர் மாவட்ட பொறுப்பாளராக கோ. தளபதி தொடர்கிறார்.
தஞ்சாவூர் :
தஞ்சாவூர் தெற்கு மாவட்ட பொறுப்பாளராக பணியாற்றி வந்த க.அண்ணாதுரை எம்.எல்.ஏ விடுவிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக பழனிவேல் நியமிக்கப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி :
திருநெல்வேலி மத்திய மாவட்ட பொறுப்பாளராக பணியாற்றி வந்த டி.பி.எம். மைதீன்கான் விடுவிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக அப்துல் வகாப் எம்.எல்.ஏ நியமிக்கப்பட்டுள்ளார்.
நீலகிரி :
நீலகிரி மாவட்ட பொறுப்பாளராக பணியாற்றி வந்த பா.மு.முபாரக் விடுவிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக கே.எம்.ராஜு நியமிக்கப்பட்டுள்ளார்.
திருவள்ளூர் :
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக பணியாற்றி வந்த கோவிந்தராஜன் எம்.எல்.ஏ விடுவிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.