திமுக மாவட்ட சட்டமன்றத் தொகுதிகள் மாற்றியமைப்பு!

அரசியல்

திமுக மாவட்ட சட்டமன்ற தொகுதிகளை மாற்றி அமைத்து கட்சித் தலைமை அறிவித்துள்ளது. மாவட்டச் செயலாளர்கள் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

கோவை, மதுரை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சட்டமன்றத் தொகுதிகளை மாற்றி அமைத்து பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

கோவையில் 5 மாவட்ட அமைப்புகள் இருந்த நிலையில் 3 மாவட்டமாகக் குறைக்கப்பட்டுள்ளது. திருப்பூரில் 2 மாவட்டமாகவும், மதுரை ஒன்று, தருமபுரி இரண்டு மாவட்ட அமைப்புகளாகவும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

கழக நிர்வாக வசதிக்காகவும், கழக பணிகள் செம்மையுற நடைபெற்றிடவும் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கட்சித் தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகர் மாவட்டம்
சட்டமன்ற தொகுதிகள் -சிங்காநல்லூர்,கோவை தெற்கு, கோவை வடக்கு,

கோவை வடக்கு மாவட்டம்
சட்டமன்ற தொகுதிகள்- மேட்டுப்பாளையம்,தொண்டாமுத்தூர், கவுண்டம்பாளையம். அவினாசி
கோவை தெற்கு மாவட்டம்
சட்டமன்ற தொகுதிகள் – சூலூர், கிணத்துகடவு வால்பாறை (தனி) பொள்ளாச்சி

திருப்பூர் வடக்கு மாவட்டம்
சட்டமன்ற தொகுதிகள்- திருப்பூர் வடக்கு,திருப்பூர் தெற்கு, பல்லடம்

திருப்பூர் தெற்கு மாவட்டம்
சட்டமன்ற தொகுதிகள் – உடுமலைப்பேட்டை,மடத்துக்குளம், தாராபுரம், காங்கேயம்

மதுரை மாநகர் மாவட்டம்
சட்டமன்ற தொகுதிகள் – மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மத்திய, மதுரை மேற்கு

தருமபுரி கிழக்கு மாவட்டம்
சட்டமன்ற தொகுதிகள்- தருமபுரி, பென்னாகரம்

தருமபுரி மேற்கு மாவட்டம்
சட்டமன்ற தொகுதிகள் – அரூர் (தனி), பாப்பிரெட்டிபட்டி, பாலக்கோடு

மேற்கண்ட சட்டமன்ற தொகுதிகள் அடங்கியவாறு மாவட்ட கழகங்கள் அமையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரியா

உணவுத் தட்டில் கை கழுவிய முதல்வர் : அதிமுக பதிலடி!

தினேஷ் கார்த்திக்கை விமர்சித்த கம்பீர்: பதிலடி கொடுத்த ரசிகர்கள்!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published.