2026 தேர்தல் பணியை தொடங்கிய ஸ்டாலின் : ஒருங்கிணைப்புக்குழு அமைப்பு!

அரசியல்

2026 தேர்தலை எதிர்கொள்ள திமுக சார்பில் ஒருங்கிணைப்புக்குழு அமைக்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

2019 பொதுத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல், 2024 பொதுத் தேர்தல் என அனைத்திலுமே திமுக வெற்றி பெற்றது.

2024 தேர்தலுக்காக திமுக முதன்மை செயலாளரும் அமைச்சருமான கே.என்.நேரு, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் அடங்கிய ஒருங்கிணைப்பு குழுவை அமைத்து திமுக தேர்தலை எதிர்கொண்டது.

இந்நிலையில், 2026ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள ஒருங்கிணைப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலுக்காக அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைப்பு குழு சிறப்பாக பணியாற்றியதாக கூறி, அந்த குழுவில் இடம் பெற்றிருந்தவர்கள் அடங்கிய குழுவையே மீண்டும் 2026 தேர்தலுக்காகவும் முதல்வர் ஸ்டாலின் அமைத்துள்ளார்.

Image

இதுகுறித்து முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் இன்று (ஜூலை 20) வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  “2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக கட்சிப் பணிகளை ஒருங்கிணைக்கவும், மேற்பார்வையிடவும் அமைக்கப்பட்ட ஒருங்கிணைப்புக்குழு தனது பணிகளை மிகச் சிறப்பாகச் செய்தது.
அதே வகையில் வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் பொருட்டு, கட்சியில் மேற்கொள்ள வேண்டிய மாறுதல்கள் அமைப்பு ரீதியான சீரமைப்புகளை திமுக தலைவருக்கும், கட்சியின் தலைமைக்கு பரிந்துரைக்கவும், தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் கே.என்.நேரு, ஆர்.எஸ்.பாரதி, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் அடங்கிய ஒருங்கிணைப்புக்குழு அமைக்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

தலித் எம்.எல்.ஏ.க்கள் எம்.பி.க்கள் குரல் கொடுக்காதது ஏன்?: ஆம்ஸ்ட்ராங் நினைவேந்தல் கூட்டத்தில் பா.ரஞ்சித் ஆவேசம்!

யுபிஎஸ்சி தலைவர் திடீர் ராஜினாமா : யார் இந்த மனோஜ் சோனி?

+1
1
+1
0
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *