பொங்கலுக்குப் பிறகு தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தொடங்கப்படும் என்று திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் இந்தியா கூட்டணி கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்குக் காங்கிரஸ், திமுக, ஐக்கிய ஜனதாதளம், உள்ளிட்ட 28 கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை அமைத்துள்ளன.
இந்த கூட்டணியின் ஐந்தாவது கூட்டம் இன்று (ஜனவரி 13) காணொளி காட்சி மூலம் நடைபெற்றது.
இதில் ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது இல்லத்திலிருந்து முதல்வர் ஸ்டாலின் மற்றும் திமுக எம்பி கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் தொகுதிப் பங்கீடு குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் டி.ராஜா டெல்லியில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
“இன்றைய கூட்டம் நல்லபடியாக அமைந்தது. மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோரால் கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை. கூட்டத்தில் தொகுதிப் பங்கீடு குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை மேற்கொண்டு விரைவில் முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டது. பொங்கலுக்குப் பிறகு தமிழகத்தில் பேச்சுவார்த்தை தொடங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்” என்று கூறினார் டி.ராஜா.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
பெரியார், அம்பேத்கர் விருதுகளை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்
தஞ்சை ஆணவக் கொலை: மேலும் மூவர் கைது!