’சரியான திசையில் திமுக – காங்கிரஸ் தொகுதி பங்கீடு’ : சல்மான் குர்ஷித்

அரசியல்

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் கூட்டணி கட்சிகளிடையே தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

அதன்படி சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக – காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை இன்று (ஜனவரி 28) மதியம் 3 மணியளவில் தொடங்கியுள்ளது. திமுக சார்பில் தொகுதி பங்கீடு குழுவை சேர்ந்த டி.ஆர்.பாலு., கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, திருச்சி சிவா, ஆ.ராசா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

முன்னதாக சத்தியமூர்த்தி பவனில் இன்று முற்பகலில் கே.எஸ்.அழகிரி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அதில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தேசிய கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைப்பாளர் முகுல் வாஸ்னிக், முன்னாள் ஒன்றிய அமைச்சர் சல்மான் குர்ஷித், அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் அஜோய் குமார், காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் பங்கேற்றனர்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சல்மான் குர்ஷித் பேசுகையில், “தொகுதி பங்கீடு குறித்து இறுதி செய்வதற்காக இங்கு அனைவரும் கூடியுள்ளோம். பல நல்ல தொகுதிகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. திமுக உடனான தொகுதி பங்கீட்டின் போது இது குறித்து விரிவாக எடுத்துரைப்போம். சரியான திசையில் காங்கிரஸ் சென்று கொண்டிருக்கிறது” என்று அவர் கூறினார்.

கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது 21 தொகுதிகளை கேட்டு, அதில் 10 இடங்களை பெற காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாக அக்கட்சி வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

மணல் கொள்ளை: காவல்துறை Vs வருவாய்த்துறை!

முட்டி மோதும் சீனியர்கள்… தட்டித் தூக்கும் உதயநிதி: இளைஞரணி எம்.பி. வேட்பாளர்கள் இவர்கள்தான்!  

+1
0
+1
3
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0