திமுக உட்கட்சி தேர்தல் : 7 புதிய மாவட்டச் செயலாளர்கள் நியமனம்!

அரசியல்

திமுக உட்கட்சி தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் 7 மாவட்டங்களுக்கு புதிய மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திமுகவின் 15 ஆவது உட்கட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. இத்தேர்தலில் முக்கிய நிகழ்வான மாவட்ட செயலாளர் பதவிக்கான தேர்தலும் நடைபெற உள்ளது.

அத்துடன் மாவட்ட தலைவர், துணைத் தலைவர், மாவட்ட துணை செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது.

இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 22 முதல் 25ம் தேதிவரை நடைபெற்றது.

இதில் பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த திமுக கட்சியினரும் அண்ணா அறிவாலயத்தில் தங்கள் ஆதரவாளர்களுடன் வந்து வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

அதேபோல் ஒரே மாவட்ட செயலாளரின் பதவிக்கு இரண்டு மற்றும் 3 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

அதனைத்தொடர்ந்து வேட்புமனு பரிசீலனையும் நிறைவடைந்த நிலையில் 7 மாவட்ட செயலாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.

அதன் பட்டியல் :

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளராக இருந்த செங்குட்டுவன் மாற்றப்பட்டு மதியழகன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளராக இருந்த இன்பசேகரன் மாற்றப்பட்டு பாப்பிரெட்டிப்பட்டி பழனியப்பன் நியமிக்கப்பட்டுள்ளார்.

நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளராக இருந்த மூர்த்தி மாற்றப்பட்டு மதுரா செந்தில் நியமிக்கப்பட்டுள்ளார்

கோவை தெற்கு மாவட்ட செயலாளராக இருந்த வரதராஜன் மாற்றப்பட்டு தளபதி முருகேசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

கோவை வடக்கு மாவட்ட செயலாளராக இருந்த முன்னாள் எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் மாற்றப்பட்டு தொண்டாமுத்தூர் ரவி நியமிக்கப்பட்டுள்ளார்.

தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயலாளராக இருந்த ஏனாதி பாலசுப்ரமணியன் மாற்றப்பட்டு அண்ணாதுரை நியமிக்கப்பட்டுள்ளார்.

திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளராக இருந்த பூபதி மாற்றப்பட்டு சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தென்காசி வடக்கு மாவட்டம் உள்ளிட்ட சில மாவட்ட செயலாளர் பதவிகளுக்கு இன்னும் முடிவு எட்டப்படவில்லை.

கிறிஸ்டோபர் ஜெமா

உட்கட்சி தேர்தல்: திமுக தலைமைக்கு எதிரான வழக்கு – விசாரணை எப்போது?

காசியின் புனிதம் கலந்த காதல் கதை ‘பனாரஸ்’!

+1
2
+1
0
+1
0
+1
3
+1
0
+1
3
+1
3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *