வைஃபை ஆன் செய்ததும் நாளை மார்ச் 20 ஆம் தேதி காலை 10 மணிக்கு திமுகவின் மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்ற தகவல் இன்பாக்ஸில் வந்து விழுந்தது.
அதை பார்த்துக் கொண்டே வாட்ஸப், ‘தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.
“சில மாதங்களுக்கு முன்பு நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஒன்றில் திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் பேசும்போது, ’தேர்தல் வேலைகளுக்கு அனைவரும் தயாராக இருங்கள். வேட்பாளர் யார் என்று நீங்கள் எந்த கவலையும் பட வேண்டாம். அதை நான் பார்த்துக் கொள்கிறேன். எந்த வேட்பாளரை நிறுத்தினாலும் அவரை வெற்றி பெற வைக்க வேண்டிய வேலை மட்டும் தான் உங்களுடையது’ என்று பேசியிருந்தார்.
அப்போதே மாவட்ட செயலாளர்களுக்கு இடையில் வேட்பாளர் தேர்வில் தங்களுடைய ஆலோசனை இருக்காதா என்று பரபரப்பாக விவாதிக்கப்பட்டது. அதேபோலத்தான் மக்களவைத் தேர்தலுக்கான திமுக வேட்பாளர்களை முடிவு செய்யும் விவகாரத்தில் இந்த முறை மாவட்ட செயலாளர்களின் கருத்துக்கள் பெரும்பாலும் கேட்கப்படவில்லை.
உளவுத்துறை மூலம் ஒவ்வொரு தொகுதிக்கும் தகுதி வாய்ந்த வேட்பாளர் யார் யார் என்று ஒரு பட்டியலை கேட்டுப் பெற்றார் முதலமைச்சர் ஸ்டாலின். அதற்குப் பிறகு சபரீசன் மேற்பார்வையில் இயங்கக்கூடிய ‘பென்’ நிறுவனத்தில் இருந்தும் அதே போல ஒவ்வொரு தொகுதிக்கும் மூன்று வேட்பாளர்கள் பட்டியலைப் பெற்றார் ஸ்டாலின்.
இந்த அடிப்படையில் தீவிர ஆய்வுக்கு பிறகு தான் வேட்பாளர் பட்டியல் தயாரானது.
இப்படியாக திமுக போட்டியிடும் 21 தொகுதிகளில் வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், வேலூர், அரக்கோணம், தூத்துக்குடி, நீலகிரி, திருவண்ணாமலை ஆகிய பத்து தொகுதிகளில் வேட்பாளர்கள் மாற்றமில்லை என்கிறார்கள்.
அதேநேரம் மிச்சம் இருக்கும் 11 தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் யார் யார் என்று எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.
ஸ்டாலின் கையில் இருக்கும் வேட்பாளர் பட்டியல் குறித்து திமுக தலைமை கழக நிர்வாகிகளிடம் விசாரித்தபோது புதிய வேட்பாளர்கள் பட்டியல் கிடைத்தது.
தஞ்சாவூர்
சிட்டிங் எம்பி பழனிமாணிக்கம்
புதிய வேட்பாளர் திருவோணம் வடக்கு ஒன்றிய செயலாளர் மகேஷ் கிருஷ்ணசாமி
பொள்ளாச்சி
சிட்டிங் எம்.பி. சண்முக சுந்தரம்
புதிய வேட்பாளர் மடத்துக்குளம் ஒன்றிய செயலாளர் ஈஸ்வர சாமி
சேலம்
சிட்டிங் எம்பி பார்த்திபன்
புதிய வேட்பாளர் சேலம் மேற்கு மாசெ செல்வகணபதி
கள்ளக்குறிச்சி
சிட்டிங் எம்பி கௌதம சிகாமணி
புதிய வேட்பாளர் சேலம் கிழக்கு மாசெ எஸ்.ஆர். சிவலிங்கம் அல்லது தியாகதுருகம் பேரூர் செயலாளர் மலையரசன்
ஆரணி DMK Candidate List for Election 2024
சிட்டிங் எம்பி விஷ்ணுபிரசாத் (காங்கிரஸ்)
புதிய வேட்பாளர் திருவண்ணாமலை வடக்கு மாசெ தரணி வேந்தன்’
பெரம்பலூர்
சிட்டிங் எம்பி பாரிவேந்தர் (ஐஜேகே)
புதிய வேட்பாளர்: அமைச்சர் நேருவின் மகன் அருண் நேரு
ஈரோடு:
சிட்டிங் எம்பி கணேசமூர்த்தி (மதிமுக)
புதிய வேட்பாளர்: திமுக இளைஞரணி மாநில துணைச் செயலாளர் ஈரோடு பிரகாஷ்
கோவை:
முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமியின் மருமகன் டாக்டர் கோகுல் பெயர் பரிசீலிக்கப்பட்டது. கடைசி நேரத்தில் சில காரணங்களால் தவிர்க்கப்பட்டு 19 இரவு வரை ஆலோசனை நீடிக்கிறது
தென்காசி
சிட்டிங் எம்பி தனுஷ்குமார்.
டாக்டர் பரிமளாவும், சங்கரன்கோவில் டாக்டர் ராணி ஸ்ரீ குமார் பெயரும் இறுதிகட்ட பரிசீலனையில்…
தர்மபுரி
சிட்டிங் எம்பி டாக்டர் செந்தில்
வழக்கறிஞர் மணி பெயர் கடைசி கட்ட பரிசீலனையில் உள்ளது.
தேனி
2019 இல் காங்கிரஸ் தோல்வி கண்ட தொகுதி
இப்போது தங்க தமிழ்செல்வன், கம்பம் செல்வேந்திரன், ஜெயக்குமார் பெயர்கள் இறுதிகட்டத்தில் உள்ளன” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பட்ஜெட் விலையில் அறிமுகமான ரியல்மீ Narzo 70 Pro 5G
வேலூர் திமுக பொருளாளர் அசோகன் அலுவலகத்தில் ஐடி ரெய்டு!
DMK Candidate List for Election 2024