அண்ணாமலை வாட்ச்: வரிந்துகட்டும் திமுக

அரசியல்

ரஃபேல் விமானத்தின் பாகங்களிலிருந்து தயாரிக்கப்பட்ட வாட்சை என் உடம்பில் உயிர் உள்ளவரை கட்டியிருப்பேன் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கைக்கடிகாரத்தின் விலை, ரூ.3 லட்சம் மதிப்புடையது என்றும் இந்த கைக்கடிகாரத்தை அவர் வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து வாங்கியுள்ளார் என்றும் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பரவியது.

குறிப்பாக திமுகவினர் இது குறித்து அதிக அளவில் பேசி வந்தனர்.

இதற்கு பதிலளித்துள்ள அண்ணாமலை, “நான் கையில் கட்டியிருக்கக்கூடிய வாட்ச் ரஃபேல் போர் விமானத்தின் பாகங்களிலிருந்து தயாரிக்கப்பட்டது.

உலகத்தில் இந்த வகை வாட்ச் 500 மட்டும் தான் உள்ளது. அதனால் என் உடம்பில் உயிர் உள்ளவரை இந்த வாட்ச் என்னிடம் இருக்கும்.

dmk cadres accuses annamalai for his watch in social media

ரஃபேல் விமான வாட்சை நம்மை தவிர வேறு யார் வாங்குவார்கள்? நம்முடைய நாட்டிற்காக இந்த வாட்சை கட்டியுள்ளேன்.

ஏனென்றால் நான் தேசியவாதி. ரஃபேல் நம்முடைய நாட்டிற்கு கிடைத்திருக்கக்கூடிய மிகப்பெரிய பொக்கிஷம். ரஃபேல் விமானம் வந்தபிறகு இந்தியா உலக அளவில் பேசப்படுகிறது.

இந்த வாட்சில் ரஃபேல் விமானம் புகைப்படம் இடம்பெற்றிருக்கும். மொத்தமுள்ள 500 வாட்ச்களில் 149-வது வாட்சை நான் கட்டியிருக்கிறேன்.

இது என்னுடைய தனிப்பட்ட விருப்பம். எனக்கு பிடித்ததை நான் செய்கிறேன். இந்தியாவினுடைய எதிரிகள் இந்தியாவிலேயே சில கட்சிக்குள் ஊடுருவி இருக்கிறார்கள்.

இந்தியா பாதுகாப்புத்துறையில் தன்னிறைவு பெறக்கூடாது என்பதற்காக சீனா மற்றும் பாகிஸ்தானுடைய ஏஜெண்டாக அவர்கள் செயல்படுகிறார்கள்.

அவர்களுக்கு என்னுடைய பதில், இது பழைய இந்தியா அல்ல மோடி ஜியின் புதிய இந்தியா. அடித்தால் நாங்கள் திருப்பி அடிப்போம்.” என்றார்.

இந்தநிலையில், அண்ணாமலை வாங்கிய வாட்சின் ரசீதை ஒரு மணி நேரத்திற்குள் வெளியிட்டால் எளியவர்களும் அந்த வாட்சை வாங்கி மகிழலாம் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “பிரான்ஸ் நிறுவனத்திற்காக, உலகில் வெறும் 500 கை கடிகாரங்கள் மட்டுமே தயாரிக்கப்பட்ட, 5 லட்சத்துக்கும் மேல் விலையுள்ள Rafale watchஐ, வெறும் 4 ஆட்டுக்குட்டி மட்டுமே சொத்தென சொல்லும் ஆட்டுப்புளுகர் கட்டியிருக்கிறார்.

அவர் வாங்கின ரசீதை ஒரு மணி நேரத்திற்குள் வெளியிட்டால் எளியவர்களும் வாங்கி மகிழலாம். வெளிநாட்டு வாட்சை கட்டியிருக்கும் தேசிய வியாதி, மன்னிக்க, தேசியவாதி, ஆடு வளர்த்து சேர்த்து 5 லட்ச ரூபாய் வாட்ச் கட்டும் அளவுக்கு உயர்ந்தது எப்படி? வார்ரூம் வழியாக தொழிலதிபர்களை மிரட்டினால் இப்படியெல்லாம் பணம் கிடைக்குமா?

கடிகாரம் வாங்கிய ரசீதை ஒரு மணி நேரத்திற்குள் வெளியிட முடியுமா? இல்லை வழக்கம்போல excel sheet ஏமாத்து வேலை தான் வருமா?” என்று பதிவிட்டுள்ளார்.

திமுக மாணவரணி தலைவர் ராஜீவ்காந்தி தனது ட்விட்டர் பதிவில், “திரு அண்ணாமலை கட்டியுள்ள watch விலை 8,00,000 மேல். அதன் நிறுவனம் ஆடம்பர luxury watch செய்யும் bell and ross என்ற சுவிட்சர்லாந்து நிறுவனம்! அண்ணாமலை இதில் தேசியவாதி என பெருமை கொள்ள எதுவும் இல்லை. அதன் விலையும் குறைவு இல்லை. இதை இவருக்கு யார் பரிசாக கொடுத்தார் என்பது தான் கேள்வி?” என்று பதிவிட்டுள்ளார்.

இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் ராகுல் காந்தி அணிந்திருந்த டி ஷர்ட்டின் விலை குறித்து பாஜக-வினர் பேசி வந்த நிலையில், தற்போது அண்ணாமலை கட்டியிருக்கக்கூடிய வாட்ச் குறித்து திமுக-வினர் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

செல்வம்

போராடிய மொராக்கோ..பந்தாடிய குரோஷியா!

சென்னை: குப்பைத் தொட்டிகள் வைக்காத கடைகளின் உரிமையாளர்களிடம் ரூ.1,18,800 அபராதம்!

+1
0
+1
1
+1
0
+1
4
+1
0
+1
0
+1
0

1 thought on “அண்ணாமலை வாட்ச்: வரிந்துகட்டும் திமுக

  1. தலைவன் எப்படியோ தொண்டனும் அப்படியே என்று சொல்லுவது போல் உள்ளது. டீ வித்தவர் அணியும் உடை உண்ணும் உணவு விலை லட்சம் அதே போல் அ. குட்டி அப்படியே. தேசியவாதம் பேசுபவன் கட்சி நாடக கம்பெனி போல் உள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *