திமுக செய்த மிகப்பெரிய சாதனை மின் கட்டணம் மற்றும் சொத்து வரியை உயர்த்தியது தான் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன்,அதிமுக சார்பில் தென்னரசு, நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன், தேமுதிக சார்பில் ஆனந்த் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்
இந்நிலையில், ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து தமிழக அமைச்சர்களும் கூட்டணி கட்சியினரும் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அது போல் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஆகியோர் வரும் 24 ஆம் தேதி பிரச்சாரம் செய்கிறார்கள்
இந்நிலையில், இன்று (பிப்ரவரி 15 ) அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவை ஆதரித்து முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்தார்.
அப்போது பேசிய அவர் “ இந்த 21 மாத கால ஆட்சியில் திமுக நாங்கள் செயல்படுத்திய எல்லா திட்டங்களையும் நிறுத்திவிட்டது என்று குற்றம் சாட்டினார். மேலும் திமுக செய்த மிகப்பெரிய சாதனை மின் கட்டணம் மற்றும் சொத்து வரியை உயர்த்தியது தான் என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், எதிர்க்கட்சி தலைவராக ஸ்டாலின் இருந்த போது பொங்கல் பண்டிகைக்கு 2500 ரூபாய் கொடுத்தால் போதாது 5000 ரூபாய் கொடுங்கள் என்றார், ஆனால் அவர் இப்போது முதலமைச்சராக உள்ளார் ஏன் அதை செய்யவில்லை என்று கேள்வி எழுப்பினார்.
தேர்தல் நேரத்தில் 520 அறிவிப்புகளைக் கொடுத்தார் ஆனால் அதை எதையும் செய்யவில்லை. நேற்று முதல்வர் ஸ்டாலின் பேசிய போது 85 சதவீதம் திமுக சொன்னதை செய்துவிட்டது என்றார். அவர் சொல்வது பச்சைபொய் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
கோலிக்கு சாதகமான வாய்ப்பு உருவாகும் என்றே அவ்வாறு செய்தேன்: மனம் திறந்த பாபர் அசாம்
டிஜிட்டல் திண்ணை: நெடுமாறன் தந்த நெருக்கடி- முறியடித்த ஸ்டாலின்