திமுக சட்டமன்றத் தொகுதிப் பார்வையாளர்கள் ஆலோசனை கூட்டம் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தலைமையில் வரும் அக்டோபர் 28-ஆம் தேதி நடைபெற உள்ளது.
2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு இப்போதே தயாராகிவிட்டது திமுக. தேர்தல் பணிகளை கவனிப்பதற்காக திமுக ஒருங்கிணைப்பு குழுவை ஸ்டாலின் அமைத்தார்.
இந்தக் குழுவில் திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, விருதுநகர் வடக்கு மாவட்ட செயலாளர் தங்கம் தென்னரசு, இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் சார்பு அணிகளுடன் ஒருங்கிணைப்பு குழு தொடர்ந்து ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில், கடந்த அக்டோபர் 8-ஆம் தேதி 2026 சட்டமன்ற தேர்தல் பணிகளை கவனிப்பதற்காக 234 தொகுதிகளிலும் தொகுதிப் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டனர். அதிகளவில் திமுக இளைஞரணி மற்றும் கட்சியில் உள்ள இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், தொகுதி பார்வையாளர்கள் ஆலோசனை கூட்டம் வரும் அக்டோபர் 28-ஆம் தேதி நடைபெறும் என்று அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது,
இதுதொடர்பாக திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில், 2026-சட்டமன்றத் தேர்தல் பணிகளை மேற்கொள்ளும் வகையில் நியமனம் செய்யப்பட்டுள்ள “சட்டமன்றத் தொகுதிப் பார்வையாளர்கள் ஆலோசனைக் கூட்டம்” வருகிற 28.10.2024 (திங்கட்கிழமை) அன்று காலை 11 மணியளவில் சென்னை, அண்ணா அறிவாலயம், “கலைஞர் அரங்கத்தில்” நடைபெறும். இக்கூட்டத்தில் தொகுதி பார்வையாளர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
எடப்பாடி பழனிசாமிக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!
அம்மாவின் கடனை அடைக்கவே நடிக்க வந்தேன்!- நடிகர் சூர்யா சொன்ன சுவாரஸ்ய தகவல்!