திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாணவர் அணியின் புதிய நிர்வாகிகளை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நியமனம் செய்துள்ளார்.
திமுக சட்ட திட்டம் விதி 18, 19 பிரிவுகளின்படி மாநில மாணவர் அணித் தலைவர், செயலாளர், இணைச் செயலாளர்கள், துணைச் செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.
அதன் படி, மாணவர் அணித் தலைவராக ராஜீவ்காந்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார். மாணவர் அணிச் செயலாளராக சி.வி.எம்.பி. எழிலரசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
மாணவர் அணி இணைச் செயலாளர்களாக பூவை சி. ஜெரால்டு மற்றும் எஸ். மோகன் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாணவர் அணி துணைச் செயலாளர்களாக மன்னை த. சோழராஜன், ரா. தமிழரசன், அதலை பி. செந்தில்குமார், கா. அமுதரசன், பி.எம். ஆனந்த், கா. பொன்ராஜ், வி.ஜி. கோகுல், பூர்ண சங்கீதா, ஜெ. வீரமணி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மோனிஷா
அரியவகை ஏழைகளுக்கான இடஒதுக்கீடு: மனுவின் மறுஅவதாரம்!
உங்களையே யார் என்று தெரியவில்லையா? – சுவாதியிடம் கொந்தளித்த நீதிபதிகள்!